நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணிபுரிந்தவர்
நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணிபுரிந்தவர் ஆப்கானிலும் பணிபுரிந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது;
அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள் நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் – தின் – ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர்.
இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தார்.சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜபார் 2004 இல் இணைந்துகொண்டார் எனினும் ஒருமாதத்தின் பின்னர் அதிலிருந்து விலக்கப்பட்டார் என அந்த அதிகாரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி.