தண்ணீர் குடிக்கப் போன புஸ்பகலாவை „ நீ என்ன பன்னாலைக்குமருமகளாகப் போகப் போறியாமே எனச் சீண்டிய சுந்தரராஜன் ரீச்சர்,பிறகு தண்ணீர் குடிக்கப் போன ஞானத்தைக் கூப்பிட்டுக் கதைக்க அதைப்பார்த்த புஸ்பகலா „ ஓம் நான் ஞானத்தை விரும்பிறதுஉண்மைதான்,படிப்பு முடிஞ்சதும் பன்னாலைக்கு மருமகளாகப்போகத்தான் போகிறன்; என்று சுந்தரராஜன் ரீச்சருக்கு முகத்தில் அடிச்சமாதிரிப் பதில் சொன்னவள், ஞானத்துடன் மீண்டும் தண்ணீர்குடிப்பதற்காக தண்ணீர் பைப் இருக்கும் கிழக்குத் திசையை நோக்கிப்போய்க் கொண்டிருந்தாள்.
தனது பேச்சை அலட்சியம் செயதுவிட்டு ஞானத்துடன் சென்றுகொண்டிருந்த புஸ்பகலாவை யன்னலில் நின்று எட்டிப் பார்த்தசுந்தரராஜன் ரீச்சர் „அவளின் கொழுப்பைப் பார்என்றுஸ்ராப் றூம்கதிரைகளில் உட்கார்ந்திருந்த ஆசிரியர்களுக்குச்கேட்கத்தக்கதாகச்சொல்லிவிட்டு;, அவர்களுக்கு கேட்காது என்று நினைத்துக்கொண்டு,புஸ்பகலாவின் உடல்சார்ந்த பொதுஇடத்தில் பேசக்கூச்சப்படும் வார்த்தையை முணுமுணுக்க அவர் சொல்லியவார்த்தைகள்அங்கிருந்த ஆசிரியர்கள்அனைவருக்கும் கேட்டு விடுகின்றது.சிலர் தலையைக் குணிந்து சிரித்தனர்.
இன்னும் சிலர்அதனை இரசித்துசிரிப்புடன் சுந்தரராஜன் ரீச்சரைகடைக்கண்ணால்பார்த்தனர்.முணுமுணுத்த வார்த்தைகளைத் தொடர்ந்து „நாளைக்கு பிரின்சிபபாலிடம்சொல்லி அவை இரண்டு பேருக்கும் என்ன செய்யிறன் பார் அவளுக்கு
பாடம் படிப்பிக்காமல் விடப் போவது இல்லைஎன்று முகம் கறுத்து கோபத்துடன் சொன்னதைக் கேட்ட முருகையா மாஸ்ரர்,ஏற்கனவே சுந்தரராஜன் ரீச்சர் முணுமுணுத்த வார்த்தையைக்கேட்டவரானபடியால்ரீச்சர் பிரின்சிபாலிடம் சொல்லி அவை இரண்டு
பேரையும் உங்களால் என்ன செய்ய முடியும் „ என்று கேட்க,அப்ப அவை
இரண்டு பேரும் நடந்து கொண்டது சரியென்று சொல்லுறியளோஎன்றுகேட்க,சும்மா போன அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு,பன்னாலைக்கு மருமகளாகப் போகப் போறியோ என்று நீங்கள் நீங்கள் கேட்டது சரியென்று நினைக்கிறியளோ „ என்று கேட்ட முருகையா மாஸ்ரர் நீங்கள் அந்தப் பிள்ளையின் உடல் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை முணுமுணுத்தீர்களே துணிவிருந்தால் அதை எல்லாருக்கும் கேட்கும்படி சொல்லுங்கள் பாரப்பம்,என்றவர் நாளைக்கு ஒரு தேவையில்லாத பிரச்சினையை நீங்கள் தூக்கிக் கொண்டு பிரின்சிப்பாலிடம் போய் அந்தப் பிள்ளைகளின் படிப்புக்கு ஏதாவது இடைஞ்சல் குடுக்க நினைச்சால் நீங்கள்
முணுமணுத்த வார்த்தை என்ன என்பதையும் நான் பிரின்சிபலிடம் சொல்லுவன், ஏன் இஞ்சை இருக்கிறவைக்கும் நீங்கள் சொன்னது எனக்கு கேட்டது போல கேட்டிருக்கும், அவையும் சாட்சி சொல்லுவினம், சொல்ல வைப்பன்என்று கோபமாகவும் வேகமாகவும் சொல்லி முடிக்கிறார்
முருகையா மாஸ்ரர்.
முருகையா மாஸ்ரருக்கும் சுந்தரராஜன் ரீச்சருக்குமிடையிலை வாக்குவாதம் முத்தப் போகுது என்பதை அறிந்து கொண்ட ஆசிரியர்களில் சிலர் அதை இரசிக்க தயாராகியும் இன்னும் சிலர் பயப்படவும் செய்தனர். முருகையா மாஸ்ரர் சொன்ன வார்த்தைகளால் கோபத்தின் உச்சத்திற்கே போன சுந்தரராஜன் ரீச்சர்ஏன் மாஸ்ரர் அவைக்காக நீங்கள் வக்காலத்து
வாங்குகிறியள்,அவை இரண்டு பேரும் படிக்கிறதை விட்டிட்டு ஒருத்தரையொருத்தர் காதலிக்கி;றது சரியென்று சொல்றியளோ என்று கேட்க; உங்களுக்கு ஆர் சொன்னது அவையிரண்டு பேரும் காதலிக்கிறதெண்டு, சரி அப்படித்தான் அவை இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலித்தால்தான் உங்களுக்கென்ன, படிப்பு படிக்கிறவனுக்கு
மட்டுந்தான் வரும், காதல் படிக்கிறவனுக்கும் வரும் படிக்காதவனுக்கும்
வரும் „ என்று முருகையா மாஸ்ரர் சொல்ல,அதுதான் அவள் என்னட்டை வந்து சொன்னாளே,நாங்கள் இரண்டு பேரும் காதலிக்கிறம் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செய்து கொண்டு பன்னாலைக்கு மருமகளாகப் போவெனென்று பயமில்லாமல் திமிராகச் சொன்னாளே என்று சொல்ல,;அது உங்களாலை வந்த பிரச்சினை நீங்கள்தான் அந்தப் பிள்ளையின் சுயமரியாதையைச் சீண்டினனீங்கள்; என்றவர் காதலிக்காத பிள்ளைகள் நல்லாய்ப் படிக்கினமோ,காதலுக்கும் படிப்பிக்கும் முடிச்சுப் போடாமல் இருங்கள், ஏன் நீங்களும் இஞ்சைதானே படிச்சனீங்கள்,அப்ப நீங்களும்கூட யாரையாவது விரும்பியிருக்கலாம் அது இயற்கை எனச் சொல்லி முடிக்க, „நான் ஆரையேன் விரும்பினதை நீங்கள் கண்டனீங்களோ „ என்று கோபமாக முருகையா மாஸ்ரரைப் பார்த்து
சுநதரராஜன் ரீச்சர் கேட்க,நான் இருக்கலாம் அது இயற்கை என்று சொன்னேனே தவிர நீங்கள் விரும்பினனீங்கள் என்று அடிச்சு சொல்லவில்லை என்றவர் ஆண்களின்ரை கக்கூஸ்ஸிலும் பெண்களின்ரை கக்கூஸ்ஸிலும் ஆசரியர்களைப் பற்றி என்னெ;ன எழுதியிருக்குது என்று
உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமே என்று பதில் சொல்கிறார்
முருகையா மாஸ்ரர்.
தண்ணீர் குடித்து முடித்த ஞானமும் புஸ்பகலாவும் அந்த நேரம் பார்த்து ஸ்ராப் றூமைக் கடந்து செல்ல அதைக் கண்ட சுந்தரராஜன் ரீச்சர்போகினம் ஜெமினி கணேசனும்,சரோஜாதேவியும்என்று சொல்ல அவர்கள் இரண்டு பேரும் யாராக இருக்கும் என்ற ஆவலில் ஆசிரியர்கள் யன்னலடிக்கு வந்து யன்னலுக்கூடாக எட்டிப் பார்க்கிறார்கள்.முருகையா மாஸ்ரர் „நல்ல பொருத்தமான சோடிகள்என்று சொல்லி வாய்விட்டுச் சிரிக்கிறார்.
ஏதோ உணர்ந்தவர்களாக ஞானமும் புஸ்பகலாவும் ஒரே நேரத்தில் ஸ்ராப் றூம் யன்னலை நடந்து கொண்டே திரும்பிப் பார்க்கிறார்கள். „எங்களைத்தான் பார்க்கினம் போல,பார்த்தால் எங்களுக்கென்ன, எனக்குப் பயமில்லை,அவையின்ரை வண்டவாளம் பற்றி எங்களுக்கும்
தெரியுமென்றவள் நீ என்ன எதுவும் சொல்லாமல் வாறாய்,எங்களை பிரின்சிபாலிடம் சுந்தரராஜன் ரீச்சர் சொல்லிடுவாரோ என்று பயப்படுறியோ என்று புஸ்பகலா கேட்கிறாள்.அவளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தான் ஞானம்.
வகுப்புக்குள் நுழைந்த இருவரும் அவரவர் இடத்தில் உட்காருகின்றனர்.ஏற்கனவே வகுப்புக்குள் உட்கார்ந்திருந்த ஆண்களும் பெண்களுமான மாணவர்கள் ஞானத்தையும் புஸ்பகலாவையும் ஏறிட்டுப் பார்க்கின்றனர்.
புஸ்பகலாவிற்கு பக்கத்திலிருந்த மகேஸ்வரி „ என்ன ஒன்றாக நடத்து வந்தியள்,அட்வான்ஸ் லெவலுக்கு போக முந்தி லவ்விலை அட்வான்ஸ் எடுத்திடுவாய போல „ என்று கிண்டல் செய்கிறாள்.;பேசாமல் இரு எனக்கிருக்கிற விசருக்குஎன்று மகேஸ்வரியை அடக்குகிறாள்.
பாடம் தொடங்குவதற்கான மணி அடித்து ஒரு நிமிடத்துக்குள் பூமிசாஸ்திர பாட மாஸ்ரர் இராஜேஸ்வரன் வகுப்புக்குள் நுழைகிறார். மாணவர்கள் அமைதி காக்க இராஜேஸ்வரன் புஸ்பகலாவையும் ஞானத்தையம் மாறி மாறி பார்க்கிறார்.தான் ஒரு புதிய செய்தியை அறிந்து கொண்டது போன்ற தோரணை அவர் பார்வையில் தெரிந்தது.
ஞானத்தையும் புஸ்பகலாவையும் யன்னலால் எட்டிப் பார்த்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.
இராஜேஸ்வரன் மாஸ்ரர் பாடத்தை நடத்திக் கொண்டிருக்க புஸ்பகலா பாடத்தைக் கவனிப்பதும் தலையைக் குனிவதுமாக இருந்தாள். ஆனால் ஞானம் எந்தச் சலனமும் இல்லாமல் பாடம் நடத்தியதைக் கவனித்தது மட்டுமல்ல இராஜேஸ்வரன் மாஸ்ரரை நேருக்கு நேர் பார்த்தான்.
வகுப்பு மாணவர்களக்கு மட்டுமே தெரிந்திருந்த ஞானம் புஸ்பகலா காதல் விவகாரம் ஆசிரியர்கள் பலருக்கும் தெரிந்ததால் அது கிசுகிசு செய்தியாக மாறி,மகாஜனாக் கல்லூரியின் மேல் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆசரியர்களுக்கும் தெரியவந்து பள்ளிக்கூட எல்லைக்குள் அவர்கள் போய்வருவதைக்கூட கவனிக்கத் தொடங்கினர்.அதுகூட முக்கிய செய்தியானது.
சுந்தரராஜன ரீசசர் ஞானத்தையும் புஸ்பகலாவையும் ஜெமினி கணேசன் சரோஜாதேவி என்று எள்ளல் செய்தமை ஏதோ ஒரு வகையில் மாணவர்களுக்குத் தெரியவர, வேறு வகுப்பு மாணவர்கள், புஸ்பகலாவையும் ஞானத்தையும் காணும் போதெல்லாம் தனது
நண்பர்களிடம் „ மச்சான் ஜெமினி சரோஜாதேவி நடிச்ச படம் வெலிங்டனில் ஓடுதாம் பார்க்கப் போகலையோ என கிண்டல் செய்யவும் தவறவில்லை. ஆனால் ஞானமோ புஸ்பகலாவோ அதைப் பொருட்படுத்தவேயில்லை.பெண்களின் கக்கூஸ் உள் சுவரிலும்,ஆண்களின் கக்கூஸ் உள் சுவரிலும் ஞானத்தையும் புஸ்பகலாவையும் இணைத்து படங்களும் வாசகங்களும் இடம்பெறத் தொடங்கின.
ஒரு நாள் பியோன் சுப்பிரமணியம் பொன்னையா மாஸ்ரர் தமிழ் படிப்பித்துக் கொண்டிருந்த போது ஞானம் புஸ்பகலாவின் வகுப்புக்கு வந்து பொன்னையா மாஸ்ரரிடம் „ ஞானசெல்வத்தையும் புஸ்பகலாவையும் பிரின்சிப்பல் வரச் சொன்னவர்என்று சொல்ல,
பொன்னையா மாஸ்ரர் அவர்கள் இருவரையும் பிரின்சிபலிடம் அனுப்பி
வைக்கின்றார்.
என்ன நடக்கப் போகுதோ தெரியர்து என்ற பதைபதைப்புடன் நெஞ்சு
படபடவென அடிக்க பிரின்சிபலின் அறையை நோக்கிப் போய்க்
கொண்டிருந்தனர் ஞானமும் புஸ்பகலாவும்,சுந்தரராஜன் ரீச்சர்தான் ஏதோ
சொல்லியிருக்கிறார் போல என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டே
பக்கம் பக்கம் நடக்காமல் எட்ட எட்ட நடந்து கொண்டிருந்தனர்.