ஓசோன் மண்டலும் மனித குலமும் ஏலையா க.முருகதாசன்
இன்று (16.09.22) ஓசோன் மண்டலத்தை பழுதடையாமல் வைத்திருப்பதற்கான
சர்வதேச விழிப்புணர்வு நாள்.உங்கள் எல்லாருக்கும் தெரியும் ஓசோன் மண்டலம் தொடர்ந்து பழுதடையுமானால் நடக்கப் போகும் விபரீதங்கள் என்னவென்று.இவ்வருட வசந்தகால பருவத்தில் நாங்கள் எதிர்கொண்ட வெயிலினதும் வெப்பத்தினதும் சூடு 36 சென்ரிகிரேட் தாண்டியதை அறிவீர்கள்.
அதற்கான காரணங்களில் அதிமுக்கிய காரணமாக இருப்பது ஓசோனில் ஏற்பட்டு வரும்
ஓட்டைகளும்,அதன் மூலமாக வரும் சூரிய வெப்பக் கதிர்கள் ஓசோன் படலத்தில்
ஏற்பட்டுள்ளு ஓட்டைகள் ஊடாக வடிகட்டாமலே வருகின்றமையுமாகும். சூரியனில் இருந்து வரும் கதிர்களில் மனித உடலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் புல்பூண்டு செடி கொடி மரங்கள் வரை தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்களும் உண்டு.
அவற்றையே ஓசோன் மண்டலம் தடுத்தும் வடிகட்டியம் எமக்குத் தருகின்றது.உலகில்
காடுகள் இல்லையெனில் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும்.அவைதான்உயிரினங்களுக்கு சுத்தமான காற்றைத் தருகின்றன.வானியல் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்திற்கு ஏற்பட்ட கதி பூமிக்கும் நிச்சயமாகஏற்படும், அதற்குக் காரணமாக இருக்கப் போகிறவர்கள் மனிதர்கள் எனவும் எச்சரித்து
வருகிறார்கள். செவ்வாய் கிரகத்திலும், சூரியனுக்கும் அதற்கும் இருக்கும் தூரத்திற்கு ஏற்றவாறு அதன் வெப்ப நிலையை தாங்கக்கூடிய உயிரினங்கள் அக்கிரகத்தில் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகள் மட்டத்தில் இருந்து வருகின்றது. ஏனக்கும் பிரபஞ்சம் கோள்கள் போன்றவற்றின் அறிதலில் சிறுவயதிலிருந்தே ஈடுபாடு உண்டு.அதனால்
செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கின்றன என்பதில் நம்பிக்கை எனக்கும்
இருக்கின்றது.
பொதுவாக மனிதர்கள் தமது பிள்ளைகளுக்காக சொத்துச் சேர்த்து
வைக்கிறார்கள்.குறிப்பாக பணம், பொருள,; வீடு வாசல், தோட்டம்;, துரவு நகைகள் என
தமது எதிர்காலச் சந்ததியினருக்கு இவையெல்லாம் சேர்த்து வைப்பவர்கள் ஒரு முக்கிய
விடயத்தை மறந்து விடுகிறார்கள். அது, தமது சந்ததியினர் இவற்றையெல்லாம் அனுபவிப்பதற்கு பூமி அழியாமல் இருக்க வேண்டும் அதற்கு இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். மனிதனுக்கு முதல் தேவைகளாக இருப்பது சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர்,சுத்தமான உணவு அதற்குப் பிறகு இருக்க இருப்பிடம்.
இயற்கை பாதிக்கப்படாமல் இருந்தால்தான் எமது எதிர்காலச் சந்ததியினரால்
ஆராக்கியமான மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும். காடுகளும்,துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகளுமே இன்றளவும் பூமியில் வாழும் வாழும் உயிரினங்களைக் காப்பற்றி வருகின்றது. உலகில் உள்ள கண்ட வாரியான நாடுகளில் கடந்தகாலங்களில் இருந்த பருவகால நிலைகள் குழம்பிப் போய் மாறி வருவதை நாங்கள் அனைவரும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.
ஜேர்மனியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பனிப்பொழிவு குறைந்து
கொண்டிருக்கிறது.குறிப்பாக நோட்றைன் வெஸ்ற்பாலன் மாநிலத்தில் பனிப் பொழிவு
அறவே இல்லை. கோள்கள் பிரபஞ்சத்தில் நிலைகொண்டிருத்தலின் இதுவரை இருந்ததைவிட விநாடிப் பொழுதுகளில் வித்தியாசப்படுவதாகவும் அதில் பூமியும் உட்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.
ஓசோன் மண்டலத்தில் தொழிற்சாலை வேதியல் கலந்த புகைகளினாலும்,வாகனங்களில் இருந்து உமிழப்படும் பகைகளினாலும் ஓட்டை விழுகின்றது என்பதுபற்றி நாடுகளின் அமைப்புகள் மட்டுமே கலந்துரையாடினால் போதுமென்ற மனோ நிலையை நாம் தவிர்த்து பூமி பற்றியும் இயற்கை பற்றியும் நாம் ஒவ்வொருவரும் பெரும் அக்கறை கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் வருங்:காலச் சந்ததியினருக்கு சேர்த்து வைக்க வேண்டிய சொத்து பூமியும், ஓசோன் மண்டலத்தைச் சேதப்படுத்தாமையும், சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், சுத்தமான உணவு என்பவையேயாகும்.
ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதன் மூலமே இவையாவும் சாத்தியமாகும்.