உலகம்
போர்ட் விலா நில அதிர்வால் 116,000 பேர் பாதிக்கக் கூடும் என தகவல்
வனுவாட்டு தலைநகர் போர்ட் விலாவில் நில அதிர்வால் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போர்ட் விலாவில் நேற்றை தினம் 7.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து 14 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் கட்டிடங்கள் பல சேதமடைந்தன.
இந்நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்
அந்த பகுதியில் ஏழு நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நில அதிர்வு காரணமாக மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் நில அதிர்வால் 116,000 பேர் பாதிக்கக் கூடும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.