முச்சந்தி
தமிழரசுக் கட்சிக்கு 75 ஆண்டுகள் பூர்த்தி; தந்தை செல்வாவுக்கு யாழில் அஞ்சலி
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு (18.12.2024) 75 ஆண்டுகள் பூர்த்தியானமையை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் நேற்றுக் காலை 8 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் கேசவன் சயந்தன், கட்சியின் வாலிப முன்னணியினர் எனப் பலரும் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-18 ஆம் திகதி கொழும்பு மருதானையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தந்தை செல்வா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.