இலங்கை

எனது பிறப்பை பற்றியும் கேட்பார்கள்;  பிறப்பு சான்றிதழுடனும் வந்த சஜித்

தனது முன்பள்ளி அனுமதி சான்றிதழ் தொடக்கம் தனது அத்தனை கல்விச் சான்றிதழ்களையும் கல்வி கற்ற பாடசாலைகள் கல்லூரிகளின் விபரங்களையும் சபைக்கு சமர்ப்பித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச .சில வேளைகளில் தனது பிறப்பை பற்றியும் ஏதாவது கேட்பார்கள் என்பதனால் பிறப்பு சான்றிதழையும் கொண்டுவந்ததாகக் கூறி அதனையும் சபைக்கு சமர்ப்பித்தார்.

அத்துடன் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் போலியானவை என யாராவது நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுவேன் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்தே இவற்றை சபைக்கு சமர்ப்பித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் உரையாற்றுகையில்,

எனது கல்வித் தகைமைகளுக்கு சவால் விடுத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும், நான் சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத் தளங்கள் மூலம் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரம் மற்றும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் சேறுபூசும் நடவடிக்கைகளுக்கும் பதிலளிகின்றேன் .

நாளுக்கு நாள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடியாக எனது கல்விச் சான்றிதழ்கள் சகலதையும் இன்று பாராளுமன்றத்தில் முன்வைகின்றேன். ஆரம்பக் கல்வி முதல், தற்போதைய பிரதமர் கற்பிக்கும் திறந்த பல்கலைக் கழகத்தின் முதுமாணி கற்கை வரையிலான அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் . நான் கல்வி கற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சகல குடிமகனாலும் பரிசீலித்துப் பார்க்க முடியும்.

நான் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது நிரூபிக்கப்பட்டால், எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி போலவே அரசியலில் இருந்தும் விலகுவேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.