ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற தயார் என்கிறது சீனா
ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் தொடர்புகளைப் பேணுவதற்கும் புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதென சீன ஜனபாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சி ஜின்பிங் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இருவரும் பெருவில் நடைபெறும் வருடாந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சந்தித்துள்ளனர்.
இதன்போது தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து பணியாற்றுவதாக ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 60 வீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பதவியேற்கவுள்ள ட்ரம்ப், சீன இறக்குமதிகள் மீதான வரிகளை உயர்த்துவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க-சீனா உறவு மேலும் நிலையற்றதாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில், சீனாவை மூலோபாய போட்டியாளர் என்று முத்திரை குத்தினார். கொவிட் தொற்றுநோய் பரவலின் போதும் சீன வைரஸ் என்று முத்திரைக் குத்தினார்.