லெபனான் மீது ஒரு நாளில் 145 முறை குண்டுகளை வீசியது இஸ்ரேல்
ஒரே நாளில் நாடு முழுவதும் 145 இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்ததாக லெபனான் அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகள் பெய்ரூட்டின் தாஹியே மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
காசாவில், ரஃபா மற்றும் Bureij அகதிகள் முகாம் மீதான தாக்குதல்களில் 15 பாலஸ்தீனியர்களைக் இஸ்ரேலியப் படைகள் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், முகமூடி அணிந்த இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் பீட் ஃபுரிக் கிராமத்தை தாக்கி பாலஸ்தீன வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்துடன் தொடர்ந்தும் போரிட்டு வருவதுடன், இஸ்ரேலிய இராணுவ தளங்களை நோக்கிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் குறைந்தது 43,799 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 103,601 பேர் காயமடைந்துள்ளனர்.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், 200 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
லெபனானில், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 3,452 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14,664 பேர் காயமடைந்துள்ளனர்.