படுதோல்வியடைந்த சுமந்திரன், சத்தியலிங்கம் பதவிகளில் இருந்து விலகிவிட வேண்டும்
பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிவிட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்,
தோற்றவர்கள் பாராளுமன்றத் தேர்தல் கேட்கக் கூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது.
முஸ்லிம்களை புலிகள் இனச் சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அது கட்சி எடுத்த முடிவில்லை. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள். நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை.
தோற்றவர்கள் தேர்தல் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியப் பட்டியல் குடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கோ என்று எங்கட ஆக்கள் சொல்லி சிலநேரம் வழங்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும்.
தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார்.