நாவல்கள்

கல்…புல்…காகம்…35…(நாவல்)…..சங்கர சுப்பிரமணியன்.

மனோன்மணியின் கேள்விக்கு பதில் சொன்ன மாமியார்,

“ஆம் அம்மா இவன் இதற்கு முன் இப்படி நடந்து நாங்கள் பார்த்ததேயில்லை. செயற்கைக்கால்களைப் பொருத்தியும் நடக்காமல்தான் இருந்தான். எங்களுக்கு கூட அவன் நடக்காமலேயே போய்விடுவானோ என்று உள்ளுக்குள் கவலையாகவே இருந்தது. அப்பறம் அவன் தேவைகாக மட்டும் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தான். ஆனால் இன்று உன்னைப் பார்த்ததும் நடக்கிறானே அதைத்தான் நம்பமுடியவில்லை” என்றாள்.

உடனே மாமனாரும் பேச்சைத் தொடர்ந்தார்.

“இதற்குள் நன்றாகவே நடந்திருப்பான். ஆனால் விரக்தியினால்தான் அவன் நடக்க முயற்சிக்கவில்லை. சொல்லப் போனால் தன்னால் உன்வாழ்க்கை கருகிவிட்டதாக எண்ணி வருந்தி உன்னை மறுமணம் செய்து வேறு வாழ்க்கையை துவங்கச் சொல்லி எங்களை வற்புறுத்திக்கொண்டே இருந்தான். அதனாலேயே உன்னிடமும் உனது குடும்பத்தாரிடமும் இதனை எப்படிச் சொல்வது என்று ஒன்றும் புரியாமலே நாட்களைக் கடத்தினோம். நீ கூட வெகுநாட்கள்வரை உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று வருந்தியிருப்பாய். தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு இதுதான் காரணம். நாங்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தோம்.” என்றார்.

அதன்பின்அவர்களது பேச்சு தொடர்ந்தது. அவன் எவ்வளவு சமாதானப்படுத்தியும் பிடிவாதமாக இருந்தான். பின் வேறு வழியில்லாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு சேரன்மகாதேவி வந்தோம். உன்னை மறமணம் பண்ணச்சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் நீ கேட்கவில்லை. உன்மேல் அளவுக்கதிகமாக பிரியம் வைத்திருக்கும் அவன் உன்வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்பதற்காகவே உன்னை மறுமணம் செய்துகொள்ளும்படி எங்களிடம் வற்புறுத்திக் கூறச்சொன்னான். ஆனால் நீயும் அவன் மேலுள்ள உண்மையான அன்பாலும் பாசத்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் மறுமணம் செய்துகொள்ள சம்மதிக்காமல் அவனிடமுள்ள குறைகளைப் பொருட்படுத்தாமல் அவனோடு வாழவே விரும்பினாய். இதை நாங்கள் சேரன்மகாதவியில் உங்கள் வீட்டில் இருக்கும்போதே அவனிடம் தெரியப்படுத்தி விட்டோம்.

இதையெல்லாம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்த மனோன்மணி இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறதா என்றாள். ஆம்… அம்மா அதுதான் அவனிடம் இவ்வளவு வேகமான முன்னேற்றத்துக்கு காரணம். போகிறபோக்கைப் பார்த்தால் இன்னும் சிலமாதங்களிலேயே நன்றாக பேசி நடந்தும் விடுவான் போல்தான் தெரிகிறது என்றனர்.

தன் கணவனை நோக்கி,

“நான் மறுமணம் செய்து கொள்வேன் என்று எப்படி உங்களால் நினைக்க முடிந்தது? இந்த நிலை எனக்கு ஏற்பட்டால் நீங்கள் வேறு பெண்ணை மறுமணம் செய்து கொள்வீர்களா?”
என்று கேட்கவும்,

“தயவுசெய்து அப்படிச் சொல்லாதே” என்றற அவள் வாயைப் பொத்தினான்.

இதைப்பார்த்த மனோன்மணியின் பெற்றோர்கள் இவர்களைப்பார்த்து பரவசமடைந்தனர். மனைவியை இவ்வளவு நேசிப்பவன் அவளை வேறு ஒருவனை மறுமணம் செய்துகொண்டு வாழச்சொல்லி தங்கள் மூலம் வற்பறுத்த எப்படி மனம் வந்தது? என்று குழம்பினர். மனதை கல்லாக்கிக்கொண்டே தங்களளை வற்புறுத்தியிருப்பான் என்று உணர்ந்தனர். தன்மீது பாசமுள்ள மனைவியின் தனக்கு எந்த அளவுக்கு பாசமுள்ளது என்பதைக்காட்ட அவளை மறுமணம் செய்யவைத்து அவளின் எஞ்சியிருக்கும் பல்லாண்டு காலவாழ்க்கையை மகிழ்ச்சியும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்க விரும்பினான் என்பதை மட்டும் அவர்களால்
உணரமுடிந்தது.

அதே சமயம் ஊரில் மனோன்மணியிடம் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தியதும் அதற்கு அவள் விடாப்பிடியாக மறுத்ததும் அவர்கள் கண்முன் இப்போது தெரிந்தது. அப்போது அவளுக்கு இந்த அளவுக்கு தன்கணவன் உடல்குணமடைந்து மனநிலையும் மாறியிருக்கும் என்பது கூடத்தெரியாது. அன்றைய நிலையில் அவனுக்கு மனநிலை பாதித்துவிட்டது நடக்கக்கூட முடியாதபடி முடமாகிவிட்டான் என்பது மட்டுமே அவளுக்கு தெரியும். ஆதலால் அவளுக்கு எந்தவித சுகமும் அவனால் கிடைக்காது சுமையாகத்தான் இருப்பானென்றும் தெரியும்.

அப்படியிருதும் அவள் அவன்மீது பாசம் வைத்து நேசித்திருப்பாள் என்பது விளங்கியது. அவர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் வெறும் உடலினால் கிடைக்கும் தாம்பத்திய சுகத்தைமட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல அதையும் தாண்இ புனிதமானது என்பதையும் இப்போது உணரமுடிந்தது.

காதலர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிர் காதலிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை சாதி, மதம், மொழி, மற்றும் பொருளாதார உயர்வு தாழ்வு என எதுவாலும் அவர்களைப் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட அவர்கள் தங்கள் காதல் நிறைவேறாதபோது  தங்களால் வேறொருவரை மணந்து வாழமுடியாது என்ற நிலையடையும் போதுதான் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்த உண்மையினை உணராது கௌரவம்தான் முக்கியம் என்று ஆணவக் கொலை நடக்க காரணமாயிருப்பவர்களை என்னென்று சொல்வது. இப்படி பலவிதமான எண்ண ஓட்டங்களுக்க மத்தியில் சிக்கியிருந்த குணேகரனின் பெற்றோர்களுக்கு மகனும் மருமகளும் கண்முன்னிருந்து மறைந்ததுகூடத் தெரியவில்லை.

( தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.