மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் பின்னணி இதுவா?
பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியும். ஆனால், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதற்கு புராணக் கதைகள் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.
சிவபெருமான் ஒரு தடவை நந்தி தேவரை நோக்கி பூமிக்குச் சென்று அங்குள்ள மனிதர்களிடம் நாள்தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மாதம் ஒருமுறை சாப்பிட வேண்டும் என அறிவித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார்.
ஆனால், சிவபெருமான் கூறியதை தவறாக செவிமடுத்த நந்தி தேவர்,எல்லோரும் தினமும் சாப்பிட வேண்டும் மாதம் ஒருமறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று அறிவித்தார்.
இதனால் சினம் கொண்ட சிவபெருமான், உணவை தயாரிக்க நீ என்றென்றும் பாடு படுவாய் என்று சாபமிட்டார்.
இந்த சாபத்தின் காரணமாக பூமியை வந்தடைந்த நந்தி தேவர் மனிதர்களுடன் சேர்ந்து வயலை உழுது விவசாயத்துக்கு உதவி செய்தது.
அன்றிலிருந்து இன்று வரையில் விவசாயத்துக்கு மாடுகள் உதவியாக இருக்கின்றன.
எனவே மாட்டுப் பொங்கல் கொண்டாட இது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இத் தினத்தில் ஜல்லிக்கட்டு எனப்படும் மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டும் பிரபலம் வாய்ந்தது.