ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் “ப்ரோமோ ஷூட்” பணிகள் கடந்த மாதம் நடைப்பெற்றது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த டீசரை சென்னை , கேரளா, பெங்களூரு மற்றும் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டனர்.
அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டீசர் காட்சியில் ரஜினிகாந்த் மிகவும் மாஸாக இருக்கிறார். அவரை எதிர்த்து அடிக்கும் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சிகள் அமைந்துள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.