வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்கு உரிய நாளாகும். சுக்கிரனுக்குரிய தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுவதால் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது.
இந்த மங்கலகரமான நாளில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற முடியும்.
வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படம் அல்லது சிலை அல்லது ஸ்ரீ யந்திரத்தை ஒரு மனைபலகையில் தூய்மையான துணி விரித்து, அதன் மீது வைக்க வேண்டும்.
அதை பூக்களால் அலங்கரித்து, பொட்டு வைத்து, நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். நைவேத்தியமாக பால் பாயசம் படைக்க வேண்டும்.
இது மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமான நைவேத்தியமாகும். பிறகு அஷ்டலட்சுமிகளையும் நினைத்து வழிபட வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் உரிய கதை, மந்திரம் ஆகியவற்றை சொல்லி, வழிபட வேண்டும். கனகதாரா ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி போற்றி துதி, ஆகியவற்றை சொல்லி வழிபடுவது மிகச் சிறந்த பலனை தரும்.