முகநூல்
சுயசரிதை என்றால் என்ன? …. ஏலையா க, முருகதாசன்.
„எனது அண்ணன் வில்லியமை பிரித்தானிய இராஜவம்சத்து வாரிசாகவும்,அவருக்கு உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உதிரிப் பாகமாக பயன்படுத்துவதற்காக என்னை
கவனமாக வளர்த்தார்கள்.எனக்கு ஒரு வாரிசையும்,அந்த வாரிசுக்கு உடல் உறுப்புத் தானம் செய்வதற்காக ஒரு மகனையும் பெற்றுத் தந்திருக்கிறாய் என்று எனது தந்தை எனது தாயிடம் சொல்லியிருக்கிறார்’
-இளவரசர் Harry
சுயசரிதை என்றால் என்ன? என்பது பற்றி தமிழ்ச் சமூகத்தின் எண்ணம் எதுவெனில் தாம் தமது வாழ்க்கையில் செய்த நல்லவற்றை மட்டுமே வெளிக் கொணர்வது என்பது.அது தவறு தனது சுயசரிதையை எழுதுபவர் தனது வாழ்வில் நடந்த கசப்பான உண்மைகளையும் வெளிப்படையாக எழுத வேண்டும்.
ஆனந்த விகடனில் நான் ஏன் பிறந்தேன் என்று எம.ஜி.ஆர் தான் செய்த நல்லவற்றை மட்டுமே எழுதினார்.தன்னால் சிதைந்து போன அரசியல்வாதிகள் பற்றியோ நட்டப்பட்டு குட்டிச்சுவராகப் போன நடிகர்களைப் பற்றியோ சீரழிக்கப்பட்ட நடிகைகள் பற்றியோ அவர் எழுதவில்லை.
அவரின் கறுப்புப் பக்கம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும் அவர் அள்ளிக் கொடுத்து வள்ளல் என்ற பெயர் அவர் தவறுகளை மறைத்து நிற்கின்றது.மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்திருக்கிறது.
மாணவர் பேரவையை திரு.புஷ்பராஜா பிற்காலத்தில் தங்களுடைய அணுகுமுறைத் தவறுகளை உணர்ந்து ,தமிழகத்தில் இருக்கும் போது ஆனந்தவிகடனில் அதை எழுதினார்.
தவறை உணர்ந்ததை உணராத சிலர் உந்த அறிவு முந்தி வந்திருக்க வேண்டும் எனக் குறைகூறினர்.தாம் செய்த நல்லவற்றை எழுதுபவர்கள் அதற்கு சுயசரிதை என்று பெயரிடக்கூடாது.நான் செய்த சாதனைகள் என்று பெயரிட்டு எழுதலாம் அதில் தவறே இல்லை.
ஆனால் சுயசரிதை என்பது வேறு என்பதை தமிழ்ச் சமூகம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்
மகாத்மா காந்தி சத்திய சோதனை என்ற பெயரில் தனது வாழ்வில் தான் விட்ட தவறுகளையெல்லாம் எழுதினார்.இந்தப் புத்தகத்தை நான் 1966 ஆண்டில் வாசித்தேன்.
அண்மையில் இங்கிலாந்தின் அரசரின் மகன் கரி ஸபர் என்ற (உதிரிப்பாகம்) என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியிருந்தார்.அது ஒளிவு மறைவற்றது.தமிழ்ச் சமூகத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் அதை ஒப்புக் கொள்ளவோ வருந்தவோ மனனிப்புக் கேட்கவோ முயல்வதில்லை.
தமிழ்ச சமூகத்தில் உள்ளவர்களால் வெளிப்படையாகத் தமது சுயசரிதையை எழுதவே முடியாது.ஏனெனில் அவர்களுக்குத் தடையாக இருப்பது அவர்களே.
ஏலையா க, முருகதாசன்.