உலகம்

ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!

கடந்த மாத இறுதியில் தனது 100 ஆவது வயதில் உயிரிழந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேர் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச் சடங்கானது வியாழக்கிழமை (09) வொஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் நடைபெற்றது.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோ பைடன், டெனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் ட்ரம்பிடம் தோல்வியடைந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது முன்னோடிகளான மைக் பென்ஸ் மற்றும் அல் கோர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு கார்டருக்கு மரியாதை செலுத்தினர்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டரம்பிடம் தோல்வியடைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவரது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தனர்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது புகழஞ்சலியில், கார்டரின் பண்பு மற்றும் தலைமைத்துவத்தை பலமுறை பாராட்டினார்.

Jimmy Carter funeral live updates: 'Definition of integrity,' grandson says - ABC News

ஒரு தசாப்தத்தில் அரசியல் ரீதியாக மோதலில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் மற்றும் ஒபாமா – இறுதி சடங்கு நிகழ்வானது தொடங்குவதற்கு முன்பு சிரித்து அரட்டையடிப்பதை காட்டும் புகைப்படங்களும் இதன்போது படம்பிடிக்கப்பட்டது.

The last time the five were gathered together was in 2018 at the funeral of George HW Bush.

முன்னாள் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தனது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தார்.ஆனால் மிச்செல் ஒபாமா கலந்து கொள்ளவில்லை.

அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கைகுலுக்கினர்.

ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் முடிவில் இருவரும் வெளியேறினர், ட்ரம்பின் அழுத்தம் இருந்தபோதிலும் பைடனின் ஜனாதிபதி பதவி வெற்றிக்கான சான்றிதழை பென்ஸ் தலைமை தாங்கினார்.

ஒரு கலக கும்பல் 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க கேபிட்டலில் நுழைந்து சான்றிதழை நிறுத்த முயற்சித்தது, சிலர் பென்ஸ் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

பின்னர் அவர் 2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்டும் இருந்தார்.

Trump, Pence shake hands at Carter funeral in first public meeting since leaving office | Fox News

நிகழ்வில் போர்த்துக்கள் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா, நெதர்லாந்தின் இளவரசி மாபெல் ஆஃப் ஆரஞ்ச்-நாசாவ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உட்பட பல தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், முக்கிய சர்வதேச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேநேரம், அண்மையக் காலங்களில் ட்ரம்பின் கண்ணில் வீழ்ந்த தூசியாகவுள்ள பதவி விலகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதில் பங்கெடுத்தார்.

அண்மைய வாரங்களில் ட்ரம்ப், ட்ரூடோவை “கவர்னர் ட்ரூடோ” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு, கனடாவிற்கு எதிராக “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாக சபதம் மேற்கொண்டிருந்தார்.

In photos: Historic guest list as five presidents gather for Carter's funeral - BBC News

2024 தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையில் எவ்விதமான பேச்சுக்களும், புன் சிரிப்புக்களும் இங்கு இடம்பெறவில்லை.

இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இரு அரசியல்வாதிகளும் தேவாலயத்திற்குள் நுழைந்த பின்னர் கைகுலுக்கவில்லை.

ட்ரம்ப் தனது இருக்கையில் அமர்ந்தபோது ஹாரிஸை வெறித்துப் பார்த்தார்.

Bloomberg Vice President Kamala Harris and Donald Trump did not shake hands at Jimmy Carter's funeral.

ஹாரிஸின் கணவரான செகண்ட் ஜென்டில்மேன் டக் எம்ஹாஃப், பின்னர் கமலா ஹாரிஸ் புஷ்ஷிடம் பேசிய சந்தர்ப்பத்தில் ட்ரம்புடன் கைகுலுக்கினார்.

இவர்கள் தவிர கார்டரின் உயிருள்ள வாரிசுகள் அனைவரும் வொஷிங்டனில் வியாழன் அன்று நடந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1976 ஆம் ஆண்டு ஜெரால்ட் ஆர். ஃபோர்டை தோற்கடித்து, அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான காட்டர் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி தனது 100 ஆவது வயதில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.