மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும் பறவை?
மனிதர்களின் கண்களை விட பெரியதாகவும், தனது மூளையை விட கண்கள் பெரியதாகவும் இருக்கும் பறவையை பற்றி பார்க்கலாம்.
சில விலங்குகள் மற்றும் பறவைகள் வழக்கத்திற்கு மாறாக பெரிய கண்களுக்கு பெயர் பெற்றவையாக இருக்கும். ஆனால் இந்த பறவையானது தன்னுடைய மூளையை விட பெரிய கண்களுடன் தனித்து நிற்கிறது.
அது என்ன பறவை என்றால் நெருப்புக்கோழி தான். இந்த பறவை தான் அதன் மூளையின் அளவை விஞ்சி, மிகப்பெரிய கண்களைக் கொண்டுள்ளது.
இந்த நெருப்புக்கோழி 8 அடி முதல் 9 அடி முதல் உயரம் வரை வளரக்கூடியது. 45 வருடங்கள் வாழும் இந்த பறவையானது சுமார் 60 முதல் 140 கிலோ வரை எடை இருக்கும்.
இந்த பறவை மற்ற பறவைகள் போல பறக்காது. ஆனால் அவற்றை விட நன்றாக ஓடக்கூடியது. இவை பெரும்பாலும் ஆப்பிரிக்கா நாட்டில் தான் காணப்படும்.
ஒரு நெருப்புக்கோழியின் கண் சுமார் 2 அங்குலம் (5 சென்டிமீட்டர்) விட்டம் கொண்டது. இது மனித கண்ணை விட ஐந்து மடங்கு பெரியது ஆகும். இவற்றின் கண்கள் பழுப்பு நிறத்தால் ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
இந்த பறவையின் கண்கள் மூலம் சுமார் 3.5 கிலோமீட்டர்கள் (2.2 மைல்கள்) வரை பார்க்க முடியும். விரிவான பார்வை புலத்தை பெற்றுள்ள நெருப்புக்கோழியின் கண்கள் அவற்றின் கழுத்துடன் இணைந்து தொலைதூரத்தில் உள்ள உள்ளவற்றை கண்டுபிடிக்க முடியும்.
மேலும், பறவையின் கூர்மையான பார்வையானது அதன் வேகத்துடன் இணைந்து விழிப்புடன் இருக்கவும், அச்சுறுத்தல்களில் இருந்து விரைவாக தப்பிக்கவும் உதவுகிறது. இவை, இரண்டு கால்விரல்களுடன், 97 கிமீ/மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
மேலும், நெருப்புக்கோழிகள் இடும் முட்டைகள் அளவில் பெரியதாக இருக்கும். அவற்றின் உணவு முக்கியமாக தாவர அடிப்படையிலானது என்றாலும், வெட்டுக்கிளிகள், பல்லிகள், பாம்புகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளையும் சாப்பிடும்.