ரெயிலுக்கு அடியில் தொங்கியபடி 290 கிமீ பயணித்த நபர்

மத்திய பிரதேசத்தில் டிக்கெட் வாங்க பணம் இல்லாமல் ஒருவர் ரெயிலுக்கு அடியில் 290 கிலோமீட்டர் தொங்கியபடி பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் வீடியோ
மத்திய பிரதேசத்தின் இடார்ச்சி நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 290 கிமீ தூரம் ரெயில் ஒன்று சென்றுள்ளது.

ஜபல்பூர் ரெயில் நிலையம் அருகே கேரேஜ் மற்றும் வேகன் துறை ஊழியர்கள் ரோலிங் சோதனையை நடத்தியுள்ளனர்.

அப்போது, ரெயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் நபர் ஒருவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர்.

ரயிலுக்கு அடியில் பதுங்கியிருந்த நபரை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆர்பிஎஃப் அதிகாரிகள் அந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *