பலதும் பத்தும்

ஆசிய விளையாட்டுப் போட்டி 11 வயதான சிறுவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 11 வயதான ஜப்பான் பாடசாலை மாணவன் யுகி குரிஹாரா, ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

‘புயோ புயோ சாம்பியன்ஸ்’ இறுதிப் போட்டியில் 1–0 என பின்தங்கியிருந்த அவர், பின்னர் 10–2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார்.

பளுதூக்குதலில் மேலும் மூன்று உலக சாதனை
இதனிடையே, பளுதூக்குதலில் மேலும் மூன்று உலக சாதனைகள் பதிவாகியுள்ளதுடன், இப்போட்டிகளில் இதுவரை பதிவான உலக சாதனைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஆடவர் மரதன் போட்டியில் ஜப்பானின் இச்சிடாகா யமாஷிடா தங்கப் பதக்கத்தையும், மகளிர் மரதன் போட்டியில் பஹ்ரைனின் ஷிதாயே ஹப்தே தங்கப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, தடகளப் போட்டிகளில் பார்வையாளர்கள் வருகை குறைந்தமை தொடர்பில் போட்டி ஏற்பாட்டுக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், சில போட்டிகளில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கைகள் காலியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *