உலகம்
பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது.
பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார்.
இங்கிலாந்து அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தினர்.
எனினும், பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என்பதை லண்டனோ அல்லது தெஹ்ரானோ வெளிப்படுத்தவில்லை.