உலகம்

“சுனாமி போல வேகமாக வெள்ளநீர் வந்தது ” ;  இதுவரை 95 பேர் பலி

நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தவேளை அது அலை போல வந்தது என்கின்றார்குயிலெர்மோ செரொனோ பெரெஸ் ( 21) .அது ஒரு சுனாமி என்கின்றார் அவர்.

ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் பெரும் இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்கிழமை வாகனத்தில் தனது பெற்றோருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை இவர் வேகமாக அதிகரித்த வெள்ளத்தில் சிக்குண்டார்.

காரை நீரில் விட்டுவிட்டு பாலத்தில் ஏறி அவர்கள் உயிர்தப்பினார்கள்.

பல மணித்தியாலங்களாக கடும்  மழை பெய்ததால் இவர்களின் குடும்பத்தவர்கள் போல பலர் வெள்ளத்தின் வேகத்தை அறியாமல் சிக்குண்டனர்.

செவ்வாய்கிழமை காலை ஸ்பெயினின் வானிலை அவதான நிலையம் வலென்சியாவில் மழை வெள்ளம் குறித்து எச்சரித்திருந்தது.

மிகவும் அவதானமாகயிருங்கள் கடும் ஆபத்துள்ளது மிகவும் அவசரமான தேவையென்றால் மாத்திரம் போக்குவரத்தை மேற்கொள்ளுங்கள் என சமூக ஊடகத்தில் எச்சரித்திருந்த வானிலை அவதான நிலையம்  பின்னர் ஆகக்கூடிய சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது.

அன்று முழுவதும் பல தடவைகள் எச்சரிக்கைகள் வெளியாகியிருந்தன,மக்கள் ஆறுகள் காணப்படும் பகுதியை நோக்கி செல்வதை  தடுக்கவேண்டும் என உள்ளுர் அதிகாரிகள் எச்சரிகப்பட்டார்கள்.

3 மணியளவில் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் லாபுளுன்டே உடில் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளம் காணப்படுவதை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

சிறிதுநேரத்தின் பின்னர் அந்த பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரிப்பதாகவும் மக்கள் ஆற்றங்கரையோரங்களில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவநிலையம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால் பல இடங்களை பொறுத்தவரை அந்த அறிவிப்பு சற்று தாமதமாக வெளியானதாக காணப்பட்டது.

20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிவ்வா மழை வெள்ளத்தின் சீற்றத்தை முதலில் எதிர்கொண்டது .

கனமழை காரணமாக செவ்வாய்கிழமை முதல் அந்த நகரத்தின் ஊடாக செல்லும் பள்ளத்தாக்கு நீர் நிரம்பியதாக காணப்பட்டது.

ஆறுமணியளவில் அந்த நகரத்தின் வீதிகள் ஆறுகளாக மாறிவிட்டன,நீரின் வேகத்தில் கார்களும் வீதிவிளக்குகள் அடித்துச்செல்லப்பட்டன.

அந்த பகுதிக்கு உதவியை வழங்குவதற்கு அவசரசேவை பிரிவினர் விரைந்தனர்.ஆனால் முன்னொருபோதும் இல்லாத வேகத்தில் வெள்ளம் வீதிகளில் சூழ்ந்துகொண்டது.

திடீரென கடும் மழை பொழிந்தது, ஒரு சில நிமிடங்களில் நீர் ஒரு மீற்றர் அளவிற்கு அதிகரித்தது என்கின்றார் நகரமேயர் ரிபா ரோஜா டி துரியா.

மழை வெள்ளத்தில் சிக்குண்டு மக்கள் காணாமல்போயுள்ள செய்திகள் அந்த பிராந்தியத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்தன.

எனினும் வலென்சியாவில் உள்ள மக்களிற்கு சிவில் பாதுகாப்பு பிரிவினர் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என எச்சரிக்கவில்லை – இரண்டு மணிநேரத்தின் பின்னரே இந்த எச்சரிக்கை வெளியானது.

ஸ்பெயினின் வானிலை அவதானநிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்து 12 மணித்தியாலங்களின் பின்னரே போக்குவரத்தினை மேற்கொள்ளவேண்டாம் என்ற அறிவிப்பு வெளியானது குறித்து பல பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த எச்சரிக்கை தாமதமாகவே வெளியானது அலுவலகங்களில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் சிக்கினர் என சிலர் தெரிவிக்கின்றனர்.

வலென்சியாவிலிருந்து பிக்காசென்டிற்கு  வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வீதிகளை விழுங்கிய மிகவேகமான வெள்ளத்தில் பகோ சிக்குண்டார்.

“வெள்ளநீரின் வேகம் கற்பனை செய்ய முடியாததாக பைத்தியக்காரத்தனமானதாக காணப்பட்டது,அதுகார்களை இழுத்துச்சென்றது” என அவர் எல்முன்டோ செய்திதாளிற்கு தெரிவித்தார். “கடும் அழுத்தம் காணப்பட்டது நான் காரிலிருந்து ஒருவாறு வெளியே வந்தேன் வெள்ளநீர் என்னை வேலியை நோக்கி தள்ளியது நான் அதனை பிடித்துக்கொண்டேன் என்னால் நகரமுடியவில்லை” என அவர் குறிப்பிட்டார்.

:அது என்னை விடவில்லை எனது ஆடைகளை கிழித்தது” என அவர் குறிப்பிட்டார்.

பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செடாவியை சேர்ந்த பட்ரிசியா ரொட்டிகேசும் மழை வெள்ளத்தில் சிக்குண்டார். “பைபோட்டாவில் நான் வாகன நெரிசலில் நின்றிருந்தவேளை வெள்ள நீர் மட்டம் அதிகரிக்க தொடங்கியது என அவர் தெரிவித்தார். கார்கள் மிதக்க தொடங்கின” என்றார் அவர்.

“ஆறுகள் பெருக்கெடுக்கப்போகின்றன என அஞ்சினோம் மற்றுமொரு வாகனச்சாரதியின் உதவியுடன் வாகனத்தை விட்டுவிட்டு நடந்து வந்தேன் புதிதாக பிறந்த குழந்தையை நபர் ஒருவர் பாதுகாப்பாக கொண்டு செல்வதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.