செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு தமிழர்கள் வாக்களித்தது மிகச் சரியான முடிவாகும்

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும், பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கை – சீனாவின் நீண்டகால நண்பனாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல முடிவுகளையும் சீனா அரசாங்கம் மதிக்கிறது. இந்தியாவும், இலங்கையும் மிக நெருக்கமான அயல் நாடாக இருக்கிறது. அதனால் இந்தியா மற்றும் இலங்கை பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதை நாம் விரும்புகிறோம்.

டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது மிகவும் சந்தோசமான விடயம். அதன் பின்னர் பொருத்தமான தருணத்தில் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு வருகை தரலாம். சீனா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதையே நாம் விரும்புகிறோம்.

வடபகுதியில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை நாம் கொரோனா காலத்தில் இருந்து மேற்கொண்டு வருகிறோம். சினோபாம் தடுப்பூசி, உலர் உணவு பொருட்கள், கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மீன்படி வலைகள் என பல உதவிகள் செய்யப்பட்டது. வடபகுதி மக்களுடன் நல் உறவை மேம்படுத்தவே விரும்புகிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.