ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்; தொடரும் அரபு நாடுகளின் மௌனம் !… – ஐங்கரன் விக்கினேஸ்வரா
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் உள்ள அதன் ஆதரவு சக்திகளும் இஸ்ரேலை நீண்ட காலமாக இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். ஈரானிய மண்ணில் இருந்தும் நேரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. தங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன என்றும், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் ஹெர்சி ஹலேவி, இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் டோமர் பாருடன் இணைந்து கேம்ப் ராபினில் உள்ள இஸ்ரேலிய விமானப்படையின் நிலத்துக்குக் கீழ் உள்ள கட்டளை மையத்தில் இருந்து ஈரான் மீதான தாக்குதல்களுக்கான உத்தரவுகளை வழங்கினர்.
கடந்த வாரம் ஈரான் தலைநகரான தெஹ்ரானில், குண்டு வெடிப்புகளின் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஊடகங்கள், நகரத்தைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து ஒலிகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளன. எனினும், ஈரானில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தகவல் இதுவரைஇல்லை.
இதனிடையே, ஈரானில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஈராக்கும் அனைத்து விமான நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது.
ஈரானுடன் அரபு நாடுகள்:
போர் சூழும் மத்திய கிழக்கில் நீண்ட கால பரம எதிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் தற்போது கைகோர்க்க நட்புறவாக முடிவு செய்துள்ளன.
இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக இப்போது அரபு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து அரபு நாடுகள் ஒரே குரலில் கூறியுள்ளமை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் பல பகுதிகளில் ராணுவ தளங்கள் உள்ளன. குறிப்பாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய பகுதிகளில் ராணுவ தளங்கள் உள்ளன.
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கப் போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஏனென்றால் அணுசக்தி தளங்களைத் தாக்குவது என்பது பெரிய சர்வதேச போர் குற்றம். அதேநேரம் அணுசக்தி தளங்களைத் தாக்கப் போவதாக அச்சுறுத்துவது கூட குற்றம் தான். அது சர்வதேச உரிமைகளுக்கு எதிரானது.
அரபுரக உறவு மேம்பாடுமா ?
பல்வேறு விஷயங்களில் ஈரான் -சவூதி இரண்டு நாடுகளும் தீவிரமாக பல காலமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் பல நிலவி வருகின்றது. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சுனி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
யேமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து திரை மறைவு போர் செய்து கொண்டு இருக்கின்றன.
நீண்ட கால பரம எதிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் தற்போது கைகோர்க்க நட்புறவாக முடிவு செய்துள்ளன.
ஆயினும் ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பின்னரும் தொடரும் அரபு நாடுகளின் மௌனம் எதுவரை என்பது புலப்படவில்லை.