இலங்கை

கோட்டா உருவாக்கிய அவன்ட்கார்ட் நிறுவனத்தின் வருமானம்; இலங்கை பெற்ற கடனை விட அதிகம்

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கடனுக்கு சமப்பட்ட தொகையை கொள்ளையடிப்பதற்கு நிஸ்ஸங்க சேனாதிபதியின் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் தகவல்கள் வெளியானதையடுத்து நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு 9 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டமைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது மேலும் பல வரப்பிரசாதங்கள், கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களும் வெளிவந்துள்ளன.

இப் பின்னணியில், சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கைக் கடற்படையினருக்கு கிடைத்து வந்த ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர் வருமானம் கோட்டாபய ராஜபக்சவின் நண்பரான நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

இதனால் நாடு இழந்த வருமானம் 2015-2019 ஆண்டுகளில் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் தொகைக்கு சமமானது என தெரியவந்துள்ளது.

2015-2019 க்கு இடையில் இறையாண்மைப் பத்திரங்களிலிருந்து 12,050 மில்லியன் டொலர்கள் எரியும் வட்டிக் கடன், நாட்டை திவால் நிலைக்குள் தள்ளுவதற்கு ஒரு முக்கிய காரணியாக காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை கடற்படையினரிடம் இருந்து ஏறக்குறைய 11,500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு கொமாண்டர் நிஸ்ஸங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அவன்ட்கார்ட் கடத்தல் தொடர்பில் வெளியான பிரத்தியேக தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி ஒன்றை ஐரிஎன் எனப்படும் அரச ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.