செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்!; 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல்
செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
2011-ல் சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான NWA7034 என்ற செவ்வாய் கிரக விண்கல், இந்த அதிர்ச்சியான தகவலுக்கு சான்றாக உள்ளது.
இந்த விண்கல் தனது பளபளப்பான கருப்பு நிறத்தால் “அழகு கருப்பு” என்று அழைக்கப்படுகிறது.
இந்த விண்கல்லில் நீர் நிறைந்த திரவங்களின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இது, செவ்வாய் கிரகத்தின் ஆரம்ப காலத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரமாகும்.
பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு நீர் மிகவும் முக்கியமானது. அப்படி இருக்கையில் செவ்வாயிலும் நீர் இருந்ததற்கான சான்று இருப்பதால், அங்கு உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.