உலகம்

அண்ணனின் சாதனையை முறியடித்த தங்கை ; ‘வயநாடு மக்களுக்கு நன்றி’

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரியை 2,09,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் வேட்பாளர் பிரியங்கா காந்தி, சி.பி.ஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இன்று சனிக்கிழமை (நவ.23) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரியை 2,09,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மூன்றாம் இடம் பிடித்த பா.ஜ.க-வின் நவ்யா ஹரிதாஸ் 1,09,202 வாக்குகள் பெற்றார்.

அண்ணனின் சாதனையை முறியடித்த தங்கை

இதனிடையே, 2024 மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

‘வயநாடு மக்களுக்கு நன்றி’ – பிரியங்கா காந்தி

இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸை சிறப்பான வெற்றிக்கு அழைத்துச் சென்ற கட்சியின் தலைமைச் செயலாளர் பிரியங்கா காந்தி, வயநாடு மக்களின் அமோக ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதற்காக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “வயநாட்டின் அன்பான சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியில் மூழ்கிவிட்டேன். காலப்போக்கில், இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர்கள் என்பதையும், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காகப் போராடுவதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

யு.டி.எஃப் கூட்டணியில் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு உழைத்த எனது அலுவலக சகாக்களுக்கு உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உணவு இல்லாமல், ஓய்வு இல்லாமல் என்னுடன் கார் பயணங்களை மேற்கொண்டு சகித்துக் கொண்டதற்கும், நாம் அனைவரும் நம்பும் இலட்சியங்களுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்கும் நன்றி.

எனது அம்மா, கணவர் ராபர்ட் மற்றும் எனது இரண்டு குழந்தைகளான ரைஹான் மற்றும் மிராயா, நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்புக்கும் தைரியத்திற்கும் எந்த நன்றியும் போதாது. எனது சகோதரர் ராகுல், நீங்கள் அனைவரையும் விட துணிச்சலானவர். எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் நன்றி!” என்று அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.