நவராத்திரியின் 5 ஆம் வழிபாடு!
நவராத்திரியின் ஐந்தாம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக வழிபாடு செய்ய வேண்டும். மேலும் மோகினி ஆகவும், நவ துர்க்கையில் ஸ்கந்த மாதாவாகவும் வழிபாடு செய்ய வேண்டிய நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்தில் வழிபாடு செய்ய வேண்டிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது காலை 6:15 இல் இருந்து 7:15 வரை அல்லது காலை 9:15ல் இருந்து 10:15 வரை அல்லது மாலை 5:30 லிருந்து 9:30 வரை.
இந்த நேரங்களில் அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைத்து வந்து இந்த வழிபாட்டை மேற்கொள்வது என்பது சிறப்பு.
அன்றைய தினத்தில் நாம் சிவப்பு நிற ஆடை அணிய வேண்டும். அம்பாளுக்கு புடவை சாற்றுவதாக இருக்கும் பட்சத்தில் சிவப்பு நிற புடவையை சாற்ற வேண்டும்.
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி தருவதாக இருக்கும் பட்சத்தில் சிவப்பு நிற துணிகளை தருவது நல்ல பலனை தரும்.
இந்த அம்பாள், மகாவிஷ்ணுவை போல் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறாள். இந்த அம்பாளின் சிறப்பு என்னவென்றால், நமக்கு என்ன பிரச்சனை உள்ளது.
என்ன பிரச்சனையை சொல்லி அம்பாளிடம் முறையிடலாம் என வைஷ்ணவி தேவியை நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே ஓடோடி வந்து, அந்த பிரச்சனை என்னவென்று அறிந்து, அதைத் தீர்க்கும் தன்மை கொண்டவள்.