கவிதைகள்
நீ போன வழி தேடி… கவிதை… கிறிஸ்டி நல்லரெத்தினம் (VIDEO)
நீ போன வழி தேடி வந்தேனடா
உன்னை, பாராமல் என் கண்கள் சோர்ந்தேனடா
எங்கேதான் போனாயோ அன்பே?
உன் வழி பார்த்து ஓயாமல் நனைந்தேனடா
விழி நனைந்தேனடா விழி நனைந்தேனடாஆகா…. அந்த நாட்கள்
மீண்டும் வராதா… வராதா?
வந்தாலும் நிலைக்காதா?
சுகம் என்ன சுகம்
இதம் என்ன இதம்!
உன் இதழ் மீது தேன் தேடி திகைத்தேனடா
நீ விரித்த வலை மீது விழுந்தேனடா, மீண்டும் விழுந்தேனடா!
எங்கேதான் போனாயோ அன்பே?
உன் வழி பார்த்து ஓயாமல் நனைந்தேனடா
விழி நனைந்தேனடா விழி நனைந்தேனடாஆகா…. அந்த நாட்கள்
மீண்டும் வராதா… வராதா?
வந்தாலும் நிலைக்காதா?
சுகம் என்ன சுகம்
இதம் என்ன இதம்!
உன் இதழ் மீது தேன் தேடி திகைத்தேனடா
நீ விரித்த வலை மீது விழுந்தேனடா, மீண்டும் விழுந்தேனடா!
நீ தானே விடிவெள்ளி
நீ தானே என் பொன்ஊஞ்சல்
உனைத்தானே அழைத்தேனே.. அன்பே
நீதானே உயிர் மூச்சு
நீதானே என் தென்றல்
வருவாயடா
வருவாயடா
மீண்டும் மீண்டும் வருவாயடா!
புள்ளிநிலா இரவில் காத்திருந்த மான் நான்
தொடுவானம் வரைக்கும் தொலை நோக்கும் கண்கள்
விண்மீன்கள் போலே தனியே… தனியே
மிதந்து மிதந்து மறைந்து போனதேனடா?
கனவாய் மறைந்ததேனடா?
தட்டிய கதவுகள் மூடிக்கொள்ள
முட்டிய இதயங்கள் பிரிந்து செல்ல
ஏன் இந்த வாழ்வு
ஏன் இந்த வாழ்வு அன்பே?
அன்பே…. அன்பே
உன் நினைவுகள் என்னை கொல்லுதடா
அந்த நினைவே நமக்கு போதுமடா
தூங்கட்டும் நம் இதயம்
அன்பே … அன்பே போகாதே
நீ! போகாதே….போகாதே..ம்ம்ம்ம்
நீ போன வழி தேடி வந்தேனடா
உன்னை, பாராமல் கண்கள் சோர்ந்தேனடா
எங்கே தான் போனாயோ அன்பே, என் மானே? ம்ம்ம்ம்