உலகம்
இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்களத்தில் இங்கிலாந்து; மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நடந்த மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து படைகள் களமிறங்கியுள்ளன.
ஏப்ரலில் ஈரான் இறுதியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட போது இங்கிலாந்து போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் குறித்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து “இஸ்ரேலுடன் நிற்கிறது” என்றார்.
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போராளிக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் ஈரானின் மூத்த தளபதி ஒருவரை கொலை செய்த அண்மைய தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலாக இந்த ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.
ஏவப்பட்ட 180 ஏவுகணைகளில் பெரும்பாலானவை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.