மழையின் போது மின்சார இரயிலுக்குள் இருந்தால் ஷாக் அடிக்குமா?
அந்தக்காலத்தில் இரயில் இயங்க வேண்டும் என்றால், நிலக்கரியை அள்ளி அள்ளிக் கொட்ட வேண்டும். கரும்புகையை கக்கிக்கொண்டு பயணிக்கும். ஒரு ஸ்டேசனில் தொடங்கி, இன்னொரு ஸ்டேசனுக்கு போவதற்குள், இரயில் ஊழியர்களுக்கு சீச்சீ என்றாகிவிடும். இன்னைக்கு அந்த சிரமமே இல்லை. முக்கால்வாசி இரயில் பாதைகள், மின்சார தடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. எல்லா வசதியும் இரயிலுக்கு உள்ளேயே கிடைக்கும். காற்றை மாசுபடுத்தும் என்கிற கவலையும் இல்லை. பொது போக்குவரத்து முறையில், இருப்பதிலேயே மிக மலிவான பயணமாக மாறியிருக்கிறது.
சரி மின்சார பாதையாக மாறிவிட்டது ஓகே.. ஒரு சின்ன சந்தேகம் நமக்கு வரணும். மழை பெய்யும் போது, மரத்துக்கு அடியில் நின்றாலே, ஈரப்பதமான மரத்தில் மின்னல் பாய்ந்து நம்மை தாக்கிவிடும் என்கிறனர். இது தவிர, கரண்ட் கம்பி அறுந்து மரத்தின் மீது விழுந்திருந்தால், ஈரப்பதம் மூலம் மரத்திற்கு அடியில் நிற்கும் நம்மையும் மின்சாரம் தாக்கிவிடும் என்கின்றனர். அப்படி இருக்கும் போது, மழை பெய்யும் போது மின்சார ரயிலில் பயணித்தால், மழைநீரின் வழியாக மின்சாரம் பாய்ந்து நம்மை தாக்கிவிடாதா?
இதற்கு கொஞ்சம் டெக்னிக்கலாக விஷயம் தெரிஞ்சவங்க, இன்சுலேசன் பண்ணியிருப்பாங்க, அதனால் எந்த பிரச்சனையும் வராது என்பார்கள். நாம் இன்னும் கொஞ்சம் டீப்பா பார்க்கலாம். மேலே உள்ள படத்தில் இருப்பதை போல, மின்சார இரயில்களின் இஞ்சினுக்கு மேலே ஒரு ஆன்டென்னா மாறி இருப்பதை பார்த்திருப்போம். அதில் தாங்க வேலையே இருக்கு. நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும், டிரான்ஸ்பார்மர் மாதிரியான அமைப்பு அங்கு இருக்கும். அந்த அளவுக்கு மின்சாரம் பாயும் பகுதி அது. அப்படி இருந்தும் துளிகூட மின்கசிவு இல்லாமல், சமாளிக்ககூடிய அளவுக்கு தொழில்நுட்பம் இருக்கு.
பேண்டாகிராப் (Pantograph) என்னும் உபகரணம் மூலமே, இரயிலின் உள்ளே மின் கம்பிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. இவை முழுதாக இன்சுலேசன் செய்யப்பட்டவை. மின்சாரம் எளிதாக கடத்தக்கூடிய பேண்டாகிராப் இருக்கும் போது, அரிதிற்கடத்தியான மழைநீர் வழியாக மின்சாரம் பாயாது. மின்கம்பிக்கும், பேண்டாகிராப் சாதனத்திற்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். மற்ற படி, மின்சாரம் இஞ்சினுக்கு செல்லும் வரையில், எந்த இடத்திலும் உலோகத்தின் மீது தொடர்பு இருக்காது. அதனால் தான் எவ்வளவு மழை காலமாக இருந்தாலும், துளிகூட மின் கசிவு இன்றி மின்சார இரயில் இயக்க முடிகிறது.