ஒரே ஒரு பாடும் நிலவாய்…. கவிதை… கண்மணிமா
பாடும் நிலாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
இசை உலகை உயிரப்பித்து
உலகையே ஆழ்வது பாலுவே
உன் குரல் தானோ…
உள்ளே பாலும் தேனும்
பாய்ச்சுவது உன் பாடல்
தரும் ஓர் சுகம் தானோ…
வசியம் செய்து எம்மை
மசிய வைத்தது உன்
இசை தரும் இதம் தானோ…
இதயங்களை இதமாக்கி எம்மை
இன்னலில் மீட்பது இளைய நிலா
உன் மொழி தானோ…
உன் பின்னே பல குரலை
ஏற்றிவைத்து ஏணியாக்கியது
உயர்ந்த உன் குணம் தானோ…
ஏக்கம் ஊட்டி எம்முள்ளே
துக்கம் தந்து மறைந்து
எனின்று தொலைந்தாயோ…
நெஞ்சுக்குள் வலி தந்து
கண்ணுக்குள் மணியாகி உன்குரலில்
விண்ணால சென்றாயோ…
சங்கீத ஜாதி முல்லை நீயாகி
கொஞ்சும் குரலாலே
நெஞ்சமெலாம் நிறைந்தாயோ…
மரங்கள் சாய்ந்தும்
கூடுகள் வீழ்ந்தும் இன்று
குயில்களையும் கதற செய்தாயோ…
இரவு முடிந்தும்
பகல் அது தொடங்கியும்
எம்மை பரிதவிக்க விட்டாயோ..
உன்னை மண்ணுக்குள்
மறைத்துவிடத்தான் மக்கள்
மனங்கள் ஏனோ மறுக்கிறதோ…
மண்ணில் உந்தன் ராகம் இன்றி
எங்கள் இசை தாகம் தீருமோ…
இதயங்கள் அமைதி கொள்ளுமோ…
உள்ளங்களை உலுக்கிப் போட்டு
உன் உயிர் மரணித்து பிரிந்தாலும்
குரலின் கொஞ்சல்களில் எங்கும்
ஒலித்துக்கொண்டே இருப்பாய்….
ஒரே ஒரு பாடும் நிலவாய்..
கண்மணிமா