முச்சந்தி
நியூசிலாந்தில் சர்ச்சைக்குரிய மசோதா எதிர்ப்பு; மாவோரி பழங்குடி எம்பியின் ஆவேச முழக்கம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி, சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த நிகழ்வு உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது)
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வு நாடு முழுவதும் பலத்த அதிர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைதாங்கி ஒப்பந்த சர்ச்சை:
வைதாங்கி ஒப்பந்தம் – முன்னதாக, 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ (Treaty of Waitangi) மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு டி பாடி மவோரி ( Te Pati Maori ) கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலில் இளம் எம்.பி. ஹானா பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப அவருடன் பிற மவோரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர்.
வைதாங்கி புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு:
அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த நிகழ்வு உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த வருட இறுதியில் ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ACT கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.
அதன் படி நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்தது. இது நாடு முழுவதும் பலத்த அதிர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
யார் இந்த மாவோரிகள் ?
மாவோரி (Maori) பூர்விகத்தை கொண்டவர்கள் பாலினேசியகள் பசிபிக் கடலெங்கும் பரவினார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் கிபி 1250ம் ஆண்டு நியூசிலாந்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
கிபி 1769ம் ஆண்டு பிரிட்டிஷ் கப்பல் கேப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அடுத்த நூறாண்டுகளில் மெதுவாக வெள்ளையர் குடியேற்றம் அதிகரித்தது. 1845 முதல் 1872 வரை சில போர்கள் நடந்தன. பிரிட்டனுடன் சமாதான ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நியூசிலாந்து அரசில் குடியுரிமை, மற்றும் மாவோரிகளுக்கு சில தனியுரிமைகளை பெற்றார்கள்.
மாவோரிகளுக்கு நில உரிமை உண்டு என்றாலும், பின்னாளில் அந்த நிலங்களை அரசே வாங்கிக்கொன்டு விட்டது. மாவோரிகளிடம் அனுமதி கேட்காமல் அவர்களது பாரம்பரிய ஆறுகள், குளங்கள், காடுகள், ஏரிகள் ஆகியவற்றில் கட்டுமானம் செய்ய முடியாது. அவர்களுக்கு ஒதுக்கபடும் எம்பி சீட்டுக்களும் உண்டு. மாவோரி மொழி அரசு மொழியாகவும் அங்கீகரிக்காப்ட்டுள்ளது.
அவர்களது சிவில் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தனி நீதிமன்றங்கள் உண்டு. மக்கள் தொகையில் 17% மாவோரிகள் என்றாலும், அவர்களில் பலர் கலப்பு மணம், நகரமயமாக்கல் என நியூசி மக்களுடன் ஒன்றாக கலந்துவிட்டார்கள். சிலர் இன்னும் மாவோரி எனும் அடையாளத்துடன் பூர்வகுடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
உலகமறிந்த முதல் நாடாளுமன்ற உரை :
நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். அப்போது டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் ஒருவர். 21 வயதேயான இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் எம்.பி. ஆனவர் என்ற பெருமையை பெற்றவராவார்.
ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கின் முதல் நாடாளுமன்ற உரை அவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. தனது பேச்சினுடே மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி நாடாளுமன்றை அதிர வைத்தார்.