மேற்குக்கரை நகரில் இஸ்ரேலிய படைகள் முற்றுகை; 11 பேர் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
“ஜெனின் மற்றும் துல்கர்மில் பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புப் படைகள் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன” என்று இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலில், குறைந்தது 11 பொது மக்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனினின் கண்காணிப்பு காணொளியில், புதன்கிழமை ஒரு தெருவில் இராணுவ வாகனங்கள் நகர்வதைக் காட்டியது.
“ஜெனின் மற்றும் துல்கர்மில் உள்ள பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான” நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஹமாஸின் ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேறியவர்களால் 640 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் நடந்த போருடன் மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இதே காலகட்டத்தில் பலஸ்தீன தாக்குதல்களில் குறைந்தது 19 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.