காலி முகத்திடலில் பட்டத்தினால் பறிப்போகவிருந்த உயிர்: மரண பயத்தை உணர்ந்த நபரின் அனுபவம்
உலகெங்கிலும் பல்வேறு வகைகளில் உயிரிழப்புகள் மிகச் சமீபகாலமாக பெருகிக் கொண்டிருப்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் கொலை, தற்கொலை, விபத்து என்ற பெயரால் நிகழ்கின்றன. எந்தப் பெயரால் நிகழ்ந்தால் என்ன? மனிதநேயம் கொண்டவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மூச்சுக்குழாயில் சீராக பாய வேண்டிய காற்று, எங்கோ ஓரிடத்தில் சிறைபட்டு கொண்டால், உயிர் பிழைத்தால் போதும் என்ற மரண பயத்தை பலரும் கண்டிருக்க கூடும்.
அப்படியான சம்பவம் ஒன்றையே கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் நபர் ஒருவர் எதிர்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை எதிர்கொண்ட அந்த நபர் “உண்மையில் மரண பயத்தை உணர்ந்தேன்” என்று மிக அழுத்தமாகக் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்னும், 10 அல்லது 15 மீட்டர் தூரம் தனது மோட்டார் சைக்கிள் சென்றிருந்தால், என் மகன் தந்தையை இழப்பான்.
என் மனைவி மற்றும் தாய், தந்தை ஆகியோர் என்னை இழந்திருக்க நேரிட்டிருக்கும்.
என் சகோதரியும் இரண்டு சகோதரர்களும் தங்களின் பெரிய சகோதரனை இழந்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சரியாக மதியம் 1. 45க்கு காலி முகத்திடல் அருகில் மோட்டார் சைக்கிளில் கொள்ளுப்பிட்டி நோக்கி சென்றேன்.
வாகனங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்ததால், 30 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தேன்.
ரத்னதீபா ஹோட்டலுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தபோது திடீரென என் கழுத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டது போல் உணர்ந்தேன்.
நான் கையால் பிடித்த போதிலும், அது என் கழுத்தில் மிகவும் இறுக்கமாக இருந்தது. உடனே மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்தி நிறுத்தினர்.
அப்போது, என் கழுத்தில் பட்டத்தின் நூல் சிக்கியிருந்ததை அறிந்து, அதை விரைவாக அகற்றியெடுத்து என் உயிரைக் காப்பாற்றினேன்
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் மரண பயத்தை உணர்ந்தேன். இதுகுறித்து கோட்டை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தெரிவித்தேன். உடனே அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நாட்டின் மிக முக்கிய வீதியில் இவ்வாறு பட்டம் விடுவது சரியா?
மோட்டார் சைக்கிள்களின் முன்பக்கத்தில் சிறு குழந்தைகளை சிலர் ஏற்றிச் செல்கின்றனர். அந்த நேரத்தில் இப்படி நடந்திருந்தால் அந்த சிறு குழந்தை இறந்திருக்கும் என்பது நூறு வீதம் உறுதி
எனவே, அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி ஒருவரின் உயிர் பறிபோகும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் வலியுறுத்தியுள்ளார்.