தாய் மற்றும் சிசுவின் மரண விவகாரம் – மன்னார் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
”மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகள் மீது மக்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்து” வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வைத்திய சாலைக்கு முன் கொட்டும் மழையிலும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பில் இடம் பெற்ற போராட்டத்தின் போது மக்கள் உண்மைகளை அறியாது குற்றம் சுமத்தியிருந்தாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் மற்றும் சிசுவின் மரண சம்பவத்தின் போது இடம் பெற்ற முரண்பாடுகளான செயற்பாட்டினால் தாங்கள் தொடர்ச்சியாக மௌனிகளாக்கப்பட்டுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் கறுப்பு துணியினால் வாய்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் தமது வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள தொடர்பாகவும் அவர்கள் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.