ரஷ்யாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் உக்ரெய்ன்; பல பிரதேசங்கள் கட்டுக்குள்
உக்ரெய்ன் தற்போது 100 ரஷ்ய குடியேற்றங்களையும் 1,294 சதுர கிலோமீற்றர் ரஷ்ய பிரதேசத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரெய்னின் ஊடுருவல் மூன்று வாரங்களுக்கு முன் ஆரம்பமானது.
உக்ரெய்ன் 1,250 சதுர கிலோமீற்றர் ரஷ்ய நிலப்பரப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உக்ரெய்ன் ஜனாதிபதி வொலோடிமார் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் 594 ரஷ்ய வீரர்களை உக்ரெய்ன் பிடித்துள்ளதாக உக்ரெய்னின் தலைமை இராணுவ அதிகாரி அலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, ரஷ்யா உக்ரைன் மீது மற்றொரு பாரியளவான தாக்குதல்களை மேற்கொண்டது. இதன்போது நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் “சந்தேகத்திற்கிடமின்றி அனைத்து தாக்குதல்களுக்கும் உக்ரெய்ன் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் என உக்ரெய்ன் ஜனாதிபதி வொலோடிமார் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.