கவிதைகள்
அடிமனதும் அலை பாய்கிறதே!… கவிதை…. சங்கர சுப்பிரமணியன்
மதுவால் போதை தலைக்கேறுமா அல்ல
அதனால் மனதில் போதை உண்டாகுமா?
மாது உன்னைப் பார்த்ததால் எனக்கும்
போதை என்ற ஒன்று எப்படித்தான் வந்தது
ஆதவனை பார்த்து மலரும் தாமரைபோல
அம்புலியைப் பார்த்து மலரும் அல்லியாக
உன்னைக் கண்டு மலரத்தானே வேண்டும்
மாறாக என்மனம் மயங்குவதுதான் ஏனோ
ஆதவன் வெப்பத்தால் தாமரை மலர்கிறதோ
சந்திரன் குளிர்ச்சியால் அல்லி மலர்கிறதோ
உன்னிடம் என் மனம்மயங்கித் தள்ளாடிடவும்
கன்னியிடம் இருக்கின்ற காந்தப் பேரழகோ
கண்ணழகு என்பார்கள் கட்டழகியிடத்தில்
பெண்ணழகு பேதையவள் உடல் அழகால்
முன்னழகு சொல்ல முத்தழகு பல்வரிசை
பின்னழகை சொல்ல பின்னிய கூந்தலென
கொடியிடை தள்ளாடும் நடைதான் அழகோ
பிடிசோறும் உண்ண முடியாமல் பேதலிக்க
கடிவாளம் இல்லாத குதிரையப் போல நான்
அடியே என்மனதை அலைபாய செய்கிறாயே
-சங்கர சுப்பிரமணியன்