கட்டுரைகள்

எம்.ஏ. சுமந்திரனின் அரசியல் பயணத்தைப் பற்றிய பிரதிபலிப்புகள்; ராஜ் சிவநாதன்

ராஜ் சிவநாதன்

அரசியலில் எந்த ஒருவரும் முழுமையாக திறமையானவர்களாகவோ அல்லது
எப்போதும் எதிரிகளாகவும் இருக்கமாட்டார்கள், மேலும் முழுதாக வெற்றி எவரும் அடைய முடியாது. இந்த வகைப்பட்டவர்களில் சுமந்திரனும் ஒருவர். அவர் முதன் முறையாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு நான் அவரை முதன்முதலில் 2010 ஆண்டு ஆஸ்திரேலியா வந்த நேரத்தில், மெல்பேர்னில் உள்ள இலங்கை தூதரகத்தில் கூட்டம் ஒன்றில் சந்தித்தேன்,நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

அப்போது, அவரை ஒரு இளம்திறமையான ஆர்வமான அரசியல்வாதியாகவும், எந்தக் கோட்டைக் கடந்தும் தமிழர் பிரச்சனைகளை தீர்க்க நினைப்பவராகவும் உணர்ந்து கொண்டேன்.
கடந்த வருடங்களில் அவரது அரசியல் வாழ்க்கையின் உயர்வுகளையும் வீழ்ச்சிகளையும் நாம் பார்த்தோம், குறிப்பாக 2024 நவம்பர் 14-ஆம் தேதியோடு அது முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் பலமுறை சந்திப்புகள் ஏற்ப்பட்டன. அப்போது முக்கியமான அரசியல் விவாதங்களை, குறிப்பாக மாகாண சபை 13ஆவது திருத்தச் சட்டத்ததின் முழுமை யாக்கம் மற்றும் கூட்டமைப்பின் இன்றய சட்டரீதியான வழக்கு நடவடிக்கைகளைப் பற்றி விவாதித்தோம்.

அவரது அரசியல் முடிவுகளை தவிர சுமந்திரன் மிகுந்த நேர்மையான அரசியல்வாதி மட்டுமல்ல தமிழர் பிரச்சனை முடிக்க பட வேண்டும் என்று திடமாக நம்பிக்கை கொண்டவர். ஆனாலும் அவருடைய ஆழுமையும் மிகுந்த நம்பிக்கையும், குறிப்பாக தமிழரசுகட்சி தலைமை தேர்தலிலும் பொதுத் தேர்தல்தலிலும், அவருக்கு எதிராகச் சென்று விட்டது.

அவர் கட்சி உறுப்பினர்களிடம் மிகுந்த நம்பிக்கை உடையவராக இருந்து வந்தார். ஆனால் அவர்களில் பலர் வெளிப்புற அழுத்தங்களால், குறிப்பாக சில வெளிநாட்டு தமிழர்களின் பண வரவு ,எதிராக இரண்டு தேர்தலிலும் ஈடுபட்டனர் .தமிழ் பிரச்சனைகளுக்காக அல்லாமல், போலி தமிழ் அரசியல் தேசியவாதிகளும் தமது நலனை முன்வைத்து இவரின் செயப்பாடுகள் ஒவ்வொன்றயும் பொய் பிரச்சாரத்திற்கும் பேச்சுகளுக்கும் பரவலாக உள்ளாக்கபட்டார்.

சமீபத்தில் நடந்த தேசிய மக்கள் சக்தி (NPP) அலை சில தீய சக்திகளை முற்றிலுமாக நீக்கியபோதும், இன்னும் சிலர் தமிழ் பிரச்சனைகளைத் தீர்க்காமல் தமது லாபத்தை மட்டுமே நோக்கி செயல்படுகின்றனர்.

இன்றைய நிலைமை

இப்போது சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு நல்ல இடைவெளியாக இருக்கலாம். இது அவருக்கு சிந்திக்கவும், அவரது வாழ்க்கை பாதையை மறுகட்டமைக்கவும் உதவும்.

வரவிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தின் போது, அவரை நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் அல்லது அரசியலமைப்புச் சிறப்பு நிபுணர்களின் குழுவில் ஒருவராக வர வேண்டும்.

அவருடைய சட்ட ஆலோசனைகள் ஒரு நீண்டகால அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பெரிதும் உதவும்.

இப்படி ஒரு பங்கு அவருக்கு கொடுக்கப்பட்டால், அவர் கொழும்பில் தனது தொழிலைத் தொடர்ந்தபடியே, தமிழர் பிரச்சனைகளுக்கான உதவிகளை தொடர்ந்து செய்ய முடியும். சிறையிலிருந்து கைதிகளை விடுவிப்பதும், நிலம் , வேறு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அவர் சாதித்த முக்கியமான முயற்சிகள் மக்கள் மனதில் நிற்கும்.

முடிவுரை

எந்த பாதையை அவர் தேர்வு செய்தாலும், அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழர் வாழ்வின் நலனுக்காக அவர் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் நீதிக்கு அவர் காண்பித்த உறுதி எப்போதும் நினைவில் இருக்கும்.

அன்புடன்,
ராஜ் சிவநாதன்
இலங்கை வாழ்தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு (WTSL) .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.