பலதும் பத்தும்

2 பனிக் கரடிகள் தாக்கி ஆர்க்டிக் ரேடார் தளத்தின் ஊழியர் உயிரிழப்பு

கனடாவின் வடக்கு நுனாவட் பகுதியிலுள்ள ஆர்க்டிக் ரேடார் தளத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர் இரண்டு பனிக் கரடிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் பாஃபின் தீவின் தென்கிழக்கே உள்ள ப்ரெவூர்ட் தீவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் நிறுவனமான நாசிட்டுக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தவராவார்.

தாக்கல் நடத்திய கரடிகளில் ஒன்றை மற்றைய ஊழியர்கள் கொன்றுள்ளனர். இந்த பகுதிகளில் மனிதர்கள் மீது பனிக் கரடி தாக்கும் சம்பவம் மிகவும் அரிதாகவே நிகழும்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

“எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முக்கியமாக ஒன்றாகும். மேலும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.” என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மனிதர்களை பனிக் கரடி தாக்கிய சம்பவத்திற்கு பிறகு பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

கடந்த ஆண்டு அலாஸ்கன் கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது 1 வயது மகன் பனிக் கரடி தாக்கி கொல்லப்பட்டனர்.

உலகிலுள்ள பனிக் கரடிகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 17,000 கரடிகள் கனடாவில் உள்ளன. பனிக் கரடிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இதற்கு புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அவைகள் வேட்டையாடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கான இடங்கள் அழிவதே காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றன.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் முகாமிலுள்ள கூடாரத்திலிருந்த மூன்று வயது சிறுமியை கறுப்புக் கரடி ஒன்று இழுத்துச் சென்றது.

சிறுமியை இழுத்துச் சென்ற கரடியை வனவிலங்கு அதிகாரிகள் பொறிகளை அமைத்து கருணைக்கொலை செய்துள்ளனர்.

கறுப்புக் கரடிகள் துருவ கரடிகளை விட மிகவும் சிறியவை, ஆனால் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.

2023 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு பெண்ணை வீட்டில் கரடி தாக்கி அவரை உட்கொண்டுள்ளது. கலிபோர்னியாவில் கரடியால் தாக்கப்பட்டு மரணம் நிகழ்ந்த முதலாவது சம்பவம் இதுவாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.