பலதும் பத்தும்
கொலம்பியா நாட்டில் ‘ஓடும் வானவில்” என்றும் அழைக்கப்படும் பஞ்சவர்ண நதி
கொலம்பியா நாட்டின் மீடா மாகாணத்தில் அமைந்துள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதியை பஞ்சவர்ண நதி என்றும் அழைக்கப்படுகிறது.
உலகில் மிக அழகான நதிகளில் ஒன்றான இந்த நதியின் கீழ்ப்பரப்பில் படர்ந்துள்ள
பலவிதமான பாசிகளின் பயனாக பஞ்ச வர்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம்) ஒடும் தண்ணீர் காட்சி தந்து வண்ணமயமான ஒரு தோற்றத்தை அளிக்கிறது.
‘ஓடும் வானவில்” என்றும் அழைக்கப்படும் இந்த ரம்மியமான நதியானது தென் அமெரிக்காவில் உள்ள மிகவும் கண் கவரும் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும்.
ஆனால் ஒதுங்கிய பிரதேசத்தில் இருக்கும் இந்த நதியை கண்டுகளிக்க தரை மார்க்கமாக அவ்வளவு இலகுவாக சென்றிட முடியாது. சாகசப் பயணம் செய்ய ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே ஆர்வத்துடன் சென்ற பார்வையிட்டு வருகின்றனர்.