வேட்டி, சட்டையணிந்து வெண்கல பதக்கத்துடன் ஹாக்கி வீரர்
ஒலிம்பிக் ஹாக்கியில் 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
கடந்த 1988 ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீஜேஷ் உதவியுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. ஹாக்கி இந்தியா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருது பெற்றுள்ளார். ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து ஜூனியர் ஹாக்கி இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெரீஸ் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீஜேஷ் பகிர்ந்துள்ளார்.