எலான் மஸ்க் – டொனால்ட் ட்ரம்ப்: நேரலை நேர்காணல்
எக்ஸ் தளத்தின் உரிமையாளரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்ஐ எக்ஸ் தனத்தின் ஸ்பேசஸில் நேர்காணல் செய்தார்.
நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 இலட்சம் பேர் கேட்டுள்ளனர்.
இந்த நேர்காணலில் எலான் மஸ்க்கின் கேள்விகளுக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் மற்றும் ஆளும் குடியரசுக் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது தோட்டா என்பதும் அது என் காதை பலமாக தாக்கியதும் எனக்கு தெரிந்தது. அப்படியொரு சூழ்நிலையில் தைரியமாக இருப்பதைப் போல் நடிக்க முடியாது. அந்த சம்பவத்தையடுத்து நான் நலமாக இருப்பதை தெரியப்படுத்தவே உடனடியாக எழுந்து நின்றேன். அவர்கள் அதற்கு ஆரவாரம் செய்தனர்” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டதோ, அப்போதிலிருந்து எழுந்து வரும் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை.
டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸின் வம்சாவளி குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்களும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இவ்வாறிருக்க தற்போது எலன் மஸ்க் உடன் நேரலை நேர்காணலில் டெனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.