உலகம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வழக்கறிஞருக்கும் குற்றவாளிக்கும் இடையிலான போட்டி
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரச்சாரம் மூலமாக தாக்கிப் பேசியுள்ளார்.
கமலா ஹாரிஸ் தனது வெள்ளை மாளிகை பிரச்சாரத்தின் முதல் பேரணியில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
விஸ்கான்சினில் சுமார் 3,000 பேர் கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் தண்டனை பெற்ற குற்றவாளிக்கும் இடையிலான தேர்வாகவும் கமலா ஹாரிஸ் சித்தரித்தார்.
இதன்போது, எதிர்ப்பாளரான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்பை தான் வழக்குத் தொடுத்ததாகக் கூறிய மோசடியாளர்களுடன் ஒப்பிட்டார்.
இதனிடையே, பெரும்பான்மையான ஜனநாயக பிரதிநிதிகளின் ஆதரவே கட்சியின் வேட்பாளராவதற்கு வழி வகுத்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.