“நண்பன் மீதான துப்பாக்கி பிரயோகம் கவலையளிக்கிறது“
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே கண்டனம் வெளியிட்டுள்ளார்.
“என் நண்பர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் கவலை அடைகிறேன்.இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் மற்றும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும்,இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மீதே,” என பதிவிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்ததுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இருவர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.