இஸ்ரேலின் இராணுவ முயற்சி தோல்வி: பல முறை உயிர் தப்பிய ஹமாஸின் இராணுவத் தளபதி
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 71 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் இராணுவத் தளபதி மொஹமட் டெய்ஃப் இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனாலும் இராணுவத் தளபதி மொஹமட் டெய்ஃப் உயிரிழந்துள்ளாரா என்பது பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு நகரமான கான் யூனிஸுக்கு மேற்கே இஸ்ரேலினால் நியமிக்கப்பட்ட மனிதாபிமான மண்டலமான அல்-மவாசியில் உள்ள கட்டிடத்தில் டெய்ஃப் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலின் இராணுவ வானொலி தெரிவித்தது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் இவர் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் 07 தடவைகள் இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல தசாப்தங்களாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் பட்டியலில் மொஹமட் டெய்ஃப் முதலிடத்தில் உள்ளார்.