இலக்கியச்சோலை

பிராண சக்தியும் மனித வளமும்…. பிராணா என்றால் என்ன?…. பாகம் 1…. சு.ஸ்ரீநந்தகுமார்.

சு.ஸ்ரீநந்தகுமார்

இந்த அதிசய விசை பிராணா என்பது என்ன? அது எவ்வாறு பல அதிசயங்களைச் செய்கின்றது? பல ஆயிரம் வருடங்களாக இது உலகளாவி உபயோகத்திலிருந்த போதும், நாம் தற்போது மட்டுமே இது பற்றிக் கேள்விப்படுகிறோம்| அதன் காரணம் என்ன? இது ஒரு விஞ்ஞான முறையா? இதனால் எதாவது பக்க விளைவுகள் உண்டா? இதனைப் பயில்வதற்கு எமக்கு எதாவது தனித்திறமை அல்லது வல்லமை வேண்டுமா? இதனை முறைப்படி பயில எவ்வளவு காலம் தேவை? எத்தகைய நோய்களை அல்லது தீராத வியாதிகளைத் தீர்க்க இது உதவலாம்? இவற்றிற்கான பதில்களை பின்வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம். இதன் ஆரம்பம் அல்லது அடி, யோகப்பயிற்சி வழி வந்ததே! னுச. னுயனெ குசயறடல, தனது நூலில், கடவுள், யோகிகள், அரசர்கள் என்ற நூலில் இந்தியாவின் கலாச்சாரமே உலகில் பழமையானதாகலாம் என்று கூறுவதுடன், கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே எவ்வாறு பிராணாவை, போர்க்களங்களிலும், தியான நிலைகளிலும், சிகிச்சையின் போதும் பாவித்தார்கள் என்றும் விரிவாகக் கூறுகின்றார்.

இனி வரும் முதல் மூன்று அத்தியாயங்களிலும், இதப் பிராண சக்தியின் தோற்றப்பாட்டையும், பிராணா வைத்தியம் பற்றியும்,  பின் வரும் இறுதி அத்தியாயங்கள் இச்சக்தியை சிகிச்சை முறைக்கு எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பது பற்றியும் தெளிவாகவும், விரிவாகவும் கூறும்.

 

இந்நூலில் விவரிக்கப்படுபவை, ஒரு கோடி மனிதர்களால், பல ஆயிரம் வருடங்களாகக் கடைப்பிடித்த முறைகளாகும். இம்முறைகள் சாதகமாக நல்ல பெறுபேறுகளைக் கொடுத்ததால் தான் இன்றும் இந்தச் சிகிச்சை முறை நின்று பயன் தருகின்றது. சக்திமுறை வைத்தியமுறையில் பல விதம் இருந்தாலும், சில தனித்தன்மையான நன்மைகள் அல்லது பலன்கள் யோகா பிராணா சிகிச்சைக்கு மட்டுமே உண்டு.

ஆன்மிகம் என்பது ஒன்றும் பெரிதல்ல. இது நிய மனதின் (pure consciousness) விளையாட்டை உணர்ந்து கொள்வதுதான். அதாவது எமது தவறுகள் பற்றியதை அறிந்துக் கொள்வதற்காக அதன் தோற்றநிலை அல்லது உற்பத்தியை அறிந்துக் கொள்வதேயாகும், அல்லது தேடிக் கண்டுப்பிடிப்பதேயாகும் – ஸ்ரீ நிசங்கதாத்தா மகாராஜ்.

பிராணா எல்லா உறுப்புகளிலும் (organs) உறைந்து, உடலின் எல்லாப்பாகங்களையும் ஒருமைப்படுத்துகின்றது. பிராணா என்பது பிரபஞ்சத்தை படைப்பதாகவும், காப்பதாகவும், அழிப்பதாகவும், போற்றி வணங்கப்படுகின்றது. பிராணாவே சு10ரியனாகவும், மழையாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், உலகம் முழுவதையும், சொர்க்கத்தையும், நரகத்தையும் கட்டுபடுத்தும் விசையாக விளங்குகின்றது. பிராணாவே எல்லாவற்றையும் ஆளும் தோற்றமாகவும், எல்லா உயிர்களுக்கும் கடவுளாகவும் உள்ளது.
பிரணாவே பிரபஞ்சத்தின் வலிய சக்தியாகும். எல்லா ஜீவராசிகளும், இதனாலேயே வாழ்கின்றன. வேறுப்பட்ட மார்க்கங்கள் அல்லது நல்வழிமுறைகள் பிராணாவிற்கு வேறுபட்ட பல பெயர்களை வழங்கியுள்ளன. உயிர்ச்சக்தி, கை (Ki) , ஒர்கோன் (orgone) மேலும் சக்தி (energy) என்று பல பெயர்கள். பிராணாவானது கூடுதலாக சுவாசத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது சுவாசமல்ல. பிராணாவானது சுவாசத்தில் நடைபயில்கிறது (rides on the breadth). . ஆனால் அதிலிருந்தும் வேறுபட்டது. பிராணாவானது, சுவாசத்தின்போது உடலினுள்ளும் வெளியிலும் செல்கின்றது.

பிராணா என்பது ஒரு சமஸ்கிருத பெயராகும். இதன் அர்த்தம், ‘பிரா’(pra) என்பது முன்னம் என்பதையும், ‘ணா’ (na) என்பது சுவாசத்தையும் குறிக்கின்றது. இது ஒரு தூய சக்தியாகும். இதற்கென ஒரு தனித் தன்மையுமில்லை. இது தனது தூய தனித் தன்மையை 3
இழக்காது. எத்தகைய தன்மைகளையும் (qualities) எடுக்க வல்லது. இது நாம் எவ்வாறு ஒரு தனிமனிதனாக இருந்து கொண்டு, உடல் அணிகலன்களை அணிவதால் அதற்குரிய தோற்றத்துடன் (style) திகழ்கிறோமோ அது போன்றது.

இந்த பிராணாவானது, தியானத்தை மேற்கொள்வதற்கு உடலுறவு அல்லது பிராண சிகிச்சையை (healing) செயற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இது உடலிற்கு சக்தி ஊட்டுவதற்கும், சிந்தனை செய்வதற்கும் உரிய எண்ணச்சக்தியை அளிப்பதற்கும் மனிதனுக்கு உதவுகின்றது.

மனதில் உருவாகும் எண்ணத்தின் அசைவுகள், பிராணாவின் அசைவாலேயே உருவாகின்றன. பிராணாவின் அசைவானது, மனப்பிரதிபலிப்பின் எண்ண அசைவுகளே! இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்த சுழற்சி (வட்டம்) போன்று தோன்றுகின்றன. ஏன் முழுமையான விஞ்ஞானம் ஒன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே, பிராணாவின் விளைவுகளைக் கொண்டு உருவாகியுள்ளது.

யோகமுறையானது, ஐந்து விதமான பிராண சக்தி எமது உடலில் இருப்பதாக கூறுகின்றது. அவையாவன பிராணா(Prana) அபண (Apana), சமண (Samana), உதன (Udana), அத்துடன் வயனா (Vyana) ஆகும். இது ஐந்து பிராணாக்களிலும், பிராணாவும் அபனாவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. பிராணாவானது இதயத்திலும், சிரசிலும் இருக்கையில், அபனாவானது முதுகு எலும்பின் (spine) அடிப்பாகத்தில் அமர்ந்துள்ளது. பொதுவாக பிராணாவும், அபனாவும் சுவாசத்தின் இரு துருவங்களாகும். பிராணாவானது  குடும்ப(solar) இயல்பையும் (அதாவது ஆண் தன்மையையும்), அபனாவானது சந்திரனின்(moon) இயல்பையும் (பெண்மைத்தன்மை) கொண்டுள்ளது.

பிராண சிகிச்சை முறையென்பது ஓர் ஆயுர்வேத அணுகுமுறையாகும். இது மீள்சக்தியூட்டதை மனிதனின் முழு உடலுக்கும் வழங்குகின்றது. அதாவது உடல், மனம், உணர்வு இதனால் பயனடைகின்றன.4

உண்மையில் இச்சிகிச்சை முறை உருவாக்கப்பட்ட நோய்களுக்கு மட்டும் தீர்வாக உதவுவது அல்ல. அதன் மூலப்பிரச்சனைக்கு (fundamental issue) ஒரு நிரந்தரத்தீர்வாகää மிகவும் பயன்தரக்கூடியதாக அமைவதே பிராணசக்தி சிகிச்சையின் சிறப்புத்தன்மையாகும்.

படம் 1: உடற்கூறுகளின் குறுக்கு முகவெட்டு

படம் 2: மூன்று உடல்களும், 5 யோகநிலை உடற்கவசங்களும்

படம் 3: மேற்கத்திய உடல் தொகுதியின் ஏழுவித உடல்கள்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.