பாராளுமன்றத்தை ஜூலை 15 கலைப்பாரா ஜனாதிபதி?; உச்சபட்ச்ச பரபரப்பில் அரசியல் களம் `
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அரசியல் சாசன அதிகாரத்தை தேர்தல் ஆணையம் ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகுபெறும். ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ஏதாவது செய்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக , பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென சீனாவுக்கு விஜயம் செய்துள்ளதோடு, சீன அதிபரையும் சந்தித்துள்ளார். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இது ஒரு தீர்க்கமான காரணியாகும். ஏனெனில் தேர்தலின் போது மொட்டு எடுக்கும் இறுதி தீர்வு மஹிந்த கையில்தான் உள்ளது.
இவை அனைத்துக்கும் மத்தியில் இன்னும் சில தினங்களில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக SJBயின் ஒரு பகுதியினரும் , ஹக்கீம், றிசாத் மற்றும் சில தமிழ் கட்சிகள் ஆகியன இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேசிய அரசாங்கத்தின் ஊடாக ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.