பலதும் பத்தும்
உலகின் முதல் மர செயற்கைக் கோள்: 50 வருட திட்டத்தில் உருவானது
உலகின் முதல் மர செயற்கைக் கோள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
இச் செயற்கைக் கோள் கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் ஹோம்பில்டர் சுமிடோமோ பாரெஸ்ட்ரியால் உருவாக்கப்பட்ட இச் செயற்கைக் கோளுக்கு லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிலவு, மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரங்களை நடுதல், மர வீடுகளைக் கட்டுதல் போன்ற 50 வருட திட்டத்துடன் இச் செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது.
குறித்த செயற்கைக் கோள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டதும் ஆறு மாதங்களுக்கு சுற்றுப்பதையில் இருக்கும்.
இதன் வெப்பநிலை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் – 100 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.