திடீரென வெடித்துச் சிதறிய மூன்று வீடுகள்: இரு பெண்கள் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் முரைனா நகரில் அமைந்துள்ள ரத்தோர் காலனியில் மூன்று வீடுகள் திடீரென நள்ளிரவு வேளையில் வெடித்துச் சிதறியுள்ளன.

இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளனர்.

சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியமைக்கான காரணம் இதுவரையில் வெளிவரவில்லை.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதோடு,வெடி விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *