சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி: அவுஸ்திரேலிய நபர் ஒருவர் கைது

தாய்லாந்தின் சுற்றுலா நகரமான பட்டாயா அருகே உள்ள தொடருந்து பாதை பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சைமன் கார்மன் (46) என்ற அவுஸ்திரேலிய நபரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் நேற்(26.6.2026) இரவு பேங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது குடிவரவுத்துறை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
வழக்குப்பதிவு
விசாரணையில், வியாழக்கிழமை அதிகாலை அந்த யுவதி கார்மனுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றதும், சில மணி நேரங்களுக்குப் பிறகு கார்மன் ஒரு பெரிய கருப்பு நிற சூட்கேஸை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதும் அங்குள்ள கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.
மீட்கப்பட்ட 17 வயதுடைய யுவதியின் உடலில் பலத்த காயங்கள் மற்றும் கீறல்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்மன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், அவரது உடலில் போராட்டத்தின் போது ஏற்பட்ட நகக்கீறல்கள் இருப்பதாகவும், அவர் மீது கொலை மற்றும் சடலத்தை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டாயா நகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
![]()