முச்சந்தி

மகாநாயக்கர்களுக்கு மறைமுக அச்சுறுத்தல்; உலப்பன்ன சுமங்கல தேரர்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருந்தது .எந்தவொரு அரசாங்க காலத்திலும் இவ்வாறு மகாநாயக்க தேரர்கள் அனுப்பும் கடிதங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்ததில்லை. எனவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மகாநாயக்கர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலாகவே நாங்கள் பார்க்கிறோம் என உலப்பன்ன சுமங்கல தேரர் தெரிவித்தார்.

கொழும்பில்நேற்று வியாழக்கிழமை தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் தேசிய சம்மேளனம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நீதிபதிகள் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் ஏனைய அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் அநீதி . இதன் மூலம் அரசாங்கம் இழைத்துள்ளது தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலே நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம்நடவடிக்கை எடுத்துள்ளது.. இது அரசாங்கம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்கும் செயல் . அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்துவரும் நம்பகத்தன்மை இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தில் இவ்வாறான விடயங்களை தெரிவிக்கவில்லை. கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்படாத ஒன்றைை அரசாங்கம் மேற்கொள்வதாக இருந்தால், அதனை மக்கள் அபிப்பிராயத்துடனே மேற்கொள்ள வேண்டும். அதாவது சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே மேற்கொள்ள வேண்டும். ஆனால் அரசாங்கம் தற்போது மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் இந்த நடவடிக்கைக்கு மக்களின் எதிர்ப்பு எழ ஆரம்பித்திருக்கிறது. சட்டத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

அதேநேரம் அரசாங்கம் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, அவர்கள் ஊடாக இந்த22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. என்றாலும் மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் இணைந்து, அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தை தற்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டு ஜனாதிபதி்க்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடிதம் அனுப்பி ஒரு வார காலத்துக்கும் அதிக நாட்கள் கழிந்தும், அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் கடிதத்தை வெளிப்படுத்தாமல் இருந்தது .எந்தவொரு அரசாங்க காலத்திலும் இவ்வாறு மகாநாயக்க தேரர்கள் அனுப்பும் கடிதங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்ததில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தேரர்களை அச்சுறுத்தும் செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.

என்றாலும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் கிடைத்திருப்பதாக அரரசாங்கம் தற்போது தெரிவித்திருக்கிறது. அப்படியானால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு தொடர்பில் தமது பதில் என்ன என்பதை அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button